மோடிக்கு புகழாரம்; நட்டா அந்த பதிவை நீக்க சொல்லிட்டாரு - சொல்லிட்டு செய்த கங்கனா
மோடியை புகழ்ந்து பதிவிட்ட பதிவை கங்கனா ரனாவத் நீக்கியுள்ளார்.
மோடிக்கு புகழாரம்
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்க கூடாது என அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் வசம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த கருத்தை விமர்சித்து பாஜக எம்.பி-யும் நடிகையுமான கங்கனா ரனாவத்,
``அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கைக்கு என்னக் காரணமாக இருக்கும்? ட்ரம்ப் அமெரிக்க அதிபர் மட்டுமே. ஆனால் உலகின் மிகவும் அதிகம் விரும்பப்படும் பிரதமர் மோடி. ட்ரம்ப் இரண்டாவது முறையாகதான் அதிபராகியிருக்கிறார்.
நீக்க சொன்ன நட்டா
ஆனால் மோடி மூன்றாவது முறையாக பிரதமர். ட்ரம்ப் ஆல்பா மேல் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் நம் பிரதமர் எல்லா ஆல்பா மேல்-க்கும் மேலான அப்பா. இது ட்ரம்ப்பின் பொறாமையா அல்லது இராஜதந்திர பாதுகாப்பின்மையா?" என கேள்வி எழுப்பியிருந்தார்.
தொடர்ந்து, “இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதிகளவில் உற்பத்தியில் ஈடுபட வேண்டாம் என டிம் குக் வசம் ட்ரம்ப் சொன்னது தொடர்பாக நான் பதிவு செய்த ட்வீட்டை நீக்குமாறு தேசியத் தலைவர் நட்டா, என்னை தொடர்பு கொண்டார்.
அந்தப் பதிவு என்னுடைய தனிப்பட்ட கருத்து என தெரிவித்துக் கொள்கிறேன். அந்தப் பதிவு இன்ஸ்டாவில் இருந்து நீக்கி விட்டேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.