தாக்குதலை நிறுத்தினாலும் இது நிச்சயம் தொடரும் - அமைச்சர் ஜெய்சங்கர்

Jaishankar Government Of India Pakistan
By Sumathi May 11, 2025 06:42 AM GMT
Report

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நிறுத்தம்

இந்தியாவின் எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்நிலையில் தாக்குதலை நிறுத்த இந்தியாவும் - பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளது.

minister jaishankar

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளிலும் இந்தியா எப்போதும் உறுதியாக இருக்கும்.

இனி பயங்கரவாத தாக்குதல் நடந்தால் போராக கருதப்படும் - இந்திய அரசு எச்சரிக்கை

இனி பயங்கரவாத தாக்குதல் நடந்தால் போராக கருதப்படும் - இந்திய அரசு எச்சரிக்கை

அமைச்சர் உறுதி

துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வது குறித்து இந்தியா - பாகிஸ்தான் புரிந்துணர்வு செய்து கொண்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்து வடிவங்களிலும் உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை இந்தியா கடைப்பிடித்து வரும் நிலையில் அது தொடரும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதல் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தானே முதலில் தொடர்பு கொண்டது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது தொடர்ந்து நீடிக்கும்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விதித்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீடிக்கும். தீவிரவாத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாடு தொடரும் என்று வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.