5-ஆம் கட்ட தேர்தல் மும்முரம் - பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த எம்.பி
இன்று நாட்டின் மக்களவை தேர்தலுக்கான 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.
எம்.பி விலகல்
வடமாநிலங்களில் பாஜக ஆழமாக கால் ஊன்ற தீவிரம் காட்டி வரும் மாநிலமாக உள்ளது மேற்குவங்கம். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மிக தீவிரமாக இருக்கும் பாஜகவிற்கு தற்போது பின்னடைவை ஒன்று ஏற்பட்டுள்ளது.
கட்சியின் ஜார்கிராம் மக்களவைத் தொகுதி எம்பி'யான குனார் ஹெம்ப்ராம் நேற்று பாஜகவில் இருந்து விலகி தன்னை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்து கொண்ட பின் பேசிய அவர், முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் தலைமையில் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என உறுதியளித்துள்ளார்.
2019-ஆம் ஆண்டு தேர்தலில் ஜார்கிராம் தொகுதியில் போட்டியிட்ட ஹெம்ப்ரா,மிற்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.