பாஜகவின் ராஜ்ய சபா எம்.பி - காலமானார் சுஷில் குமார் மோடி!! பிரதமர் மோடி இரங்கல்

Narendra Modi India Bihar
By Karthick May 14, 2024 05:41 AM GMT
Report

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சுஷில் குமார் மோடி காலமடைந்துள்ளார்.

சுஷில் குமார் மோடி

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர் சுஷில் குமார் மோடி. பீகார் மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபா எம்.பி'யான அவர், பீகார் மாநில துணை முதல்வராகவும் இருந்துள்ளார்.

BJP Sushil Kumar Modi dies

மாநிலத்தின் நிதியமைச்சராகவும் இருந்துள்ள சுஷில் குமார் மோடி, பாஜகவின் அடித்தளமாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வாழ்நாள் உறுப்பினராக இருந்துள்ளார். நீண்ட காலமாக கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று இயற்கை எய்தினார்.


நாட்டின் முக்கிய தலைவர்கள் பலரும் அவருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அவரின் மறைவை குறித்து நாட்டின் பிரதமர் மோடி, இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

பிரதமர் மோடி இரங்கல் 

கட்சியில் எனது மதிப்புமிக்க சக ஊழியரும், பல தசாப்தங்களாக எனது நண்பருமான சுஷில் மோடியின் அகால மறைவால் ஆழ்ந்த வருத்தம். பாஜகவின் எழுச்சி மற்றும் பீகாரில் அதன் வெற்றிகளுக்குப் பின்னால் அவரது விலைமதிப்பற்ற பங்களிப்பு உள்ளது. எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்து, மாணவர் அரசியலில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார்.


அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் நட்பு எம்எல்ஏவாக அறியப்பட்டார். அரசியல் தொடர்பான விஷயங்களைப் பற்றிய அவரது புரிதல் மிகவும் ஆழமானது. ஒரு நிர்வாகியாகப் பாராட்டத்தக்க பல பணிகளைச் செய்தார். ஜிஎஸ்டியை நிறைவேற்றியதில் அவரது பங்கு எப்போதும் நினைவில் இருக்கும். இந்த துக்க நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!