கணவர் குடிப்பழக்கத்தை நிறுத்த ஒரே வழி...வீட்ல வந்து குடிக்க சொல்லுங்க - பாஜக அமைச்சர் ஐடியா!
கணவர்களை மதுவை வீட்டிற்கு வாங்கி வந்து குடிக்க சொல்லுமாறு பாஜக அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.
பாஜக அமைச்சர்
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது.முதல்வராக மோகன் யாதவ் உள்ளார். அவரது அமைச்சரைவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக இருப்பவர் நாரயண சிங் குஷ்வாஹா. அண்மையில் இவர் ஆண்கள் குடிப்பழக்கத்தை கைவிட வினோத ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.
அதாவது போபாலில் மது மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பாஜக அமைச்சர் நாராயண சிங்க் குஷ்வாஹா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தாய்மார்களும், சகோதரிகளும் தங்களின் கணவன்மார்கள் குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று விரும்பினால்,
ஒரே வழி...
அவர்களிடம் முதலில் வெளியில் போய் குடிக்க வேண்டாம்.. வீட்டிற்கு வாங்கி வந்து என் முன்னால் குடியுங்கள் என்று சொல்லுங்கள். குடும்பத்தினர் முன்னிலையில் அவர்கள் குடிக்கும் போது, ஆண்களின் குடிப்பழக்கம் படிப்படியாக குறையும்.
இறுதியில் குடிப்பழக்கத்தை முற்றிலும் கைவிட்டு விடுவார்கள். மனைவி மற்றும் பிள்ளைகள் முன்னால் குடிப்பதை நினைத்து அவர்கள் வெட்கப்படுவார்கள். உங்களை பார்த்து நமது பிள்ளையும் குடிக்க பழகிவிடும் என்றும் கணவனிடம் மனைவி சொல்ல நியாபகப்படுத்த வேண்டும்" என்றார். இந்த பேச்சு கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.