தமிழ்நாட்டில் பாஜக இதுவரை வெற்றி பெற்ற தொகுதிகள்

Pon Radhakrishnan Tamil nadu BJP Election
By Karthikraja Jun 04, 2024 03:23 AM GMT
Report

 இதுவரை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்நாட்டில் பாஜக எங்கெல்லாம் வெற்றி பெற்றது என்ற தகவல்களை பார்ப்போம்.

தமிழ்நாட்டில் பாஜக

தமிழ்நாட்டில் எப்படியாவது தாமரையை மலர செய்ய வேண்டுமென பாஜக பல்வேறு முயற்சிகள் செய்தாலும் இதுவரை தமிழகத்தில் பெரிய அளவில் பாஜக வெற்றி பெறவில்லை.

தமிழ்நாட்டில் பாஜக இதுவரை வெற்றி பெற்ற தொகுதிகள் | Bjp Lok Sabha History In Tamilnadu

கடந்த 1998 ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது. அதில், நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாஸ்டர் மதன், கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணன், திருச்சியில் ரங்கராஜன் குமாரமங்கலம் வென்றனர். அதிமுக ஆதரவை விலக்கி கொண்டதால் 13 மாதங்களில் மத்தியில் வாஜ்பாயின் பாஜக அரசு கவிழ்ந்து மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் பாஜக யாரும் எதிர்பார்க்காத வகையில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெரும் - மத்திய அமைச்சர் எல்.முருகன்

தமிழ்நாட்டில் பாஜக யாரும் எதிர்பார்க்காத வகையில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெரும் - மத்திய அமைச்சர் எல்.முருகன்

பாஜக திமுக கூட்டணி

1999 நடந்த மறு தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. நீலகிரியில் மாஸ்டர் மதன், நாகர்கோவிலில் பொன். ராதாகிருஷ்ணன், திருச்சியில் ரங்கராஜன் குமாரமங்கலம், கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றனர்.

தமிழ்நாட்டில் பாஜக இதுவரை வெற்றி பெற்ற தொகுதிகள் | Bjp Lok Sabha History In Tamilnadu

2004 மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

அதன்பிறகு 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். பாஜக கூட்டணியில் இடம் பிடித்த பாமக தருமபுரி தொகுதியில் வென்றது.

தனித்து போட்டி

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்திருந்த பாஜகவால் எந்த தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை. அதிமுக பாஜக கூட்டணியில் போட்டியிட்ட 40 தொகுதியில் தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக சார்பில் ஓ.பி.இரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், 2024ம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை அடுத்து பாமக, அமமுக, ஓபிஎஸ், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது.

இந்த தேர்தலில் எப்படியும் நெல்லை, வேலூர், கன்னியாகுமரி, கோயம்புத்தூர் பெரம்பலூர் ஆகிய தொகுதியில் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் பாஜக இருந்து வருகிறது.