மம்தா பானர்ஜி பின்னடைவு? வங்க தேசத்தை மெல்ல கைப்பற்றும் பாஜக!
தபால் எணிக்கையில் பாஜக முன்னிலையில், உள்ளது.
மம்தா பின்னடைவு?
நடப்பாண்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி ஜின் 1 வரை நடந்து முடிந்தது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இதற்கான வாக்கு பதிவுகள் காலையில் துவங்கியது.
இந்த சூழலில், வங்க தேசத்தில், 12 வருடங்களை கடந்து மம்தா பானர்ஜி முதல்வராக இருந்து வருகிறார். வழக்கம் இம்முறையும் வெற்றியை நோக்கி எதிர்நோக்கி காத்திருக்கிறார். ஆனால் தற்போது நடந்து வரும் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் உள்ளது. முன்னதாக மம்தா பானர்ஜி பாஜகவுடனே கூட்டணி அமைத்திருந்துள்ளார்.
ஆனால், தற்போது பாஜகவை முற்றிலும் எதிர்த்து இந்திய கூட்டணியை ஆதரித்து வருகின்றார். இருப்பினும், அவர் காங்கிரஸுடனோ அல்லது கம்யூனிஸ்டுகளுடனோ கூட்டணி வைக்காமல், தனித்தே திரிணாமுல் காங்கிரஸ் களம் காண்கிறது.இந்த முறை தேர்தலில் சினிமா, கிரிக்கெட் பிரபலங்களுக்கு வாய்ப்பு தந்து போட்டியிட செய்திருக்கிறார்.
கைப்பற்றும் பாஜக
அந்த வகையில், திரிணாமுல் காங்கிரஸ் மொத்தமுள்ள 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது போல் பாஜகவும் தனித்தே போட்டியிட்டுள்ளது. எனினும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும்தான் கடும் போட்டி நிலவி வருகிறது. அதிலும், மம்தாவுக்கு சந்தேஷ்காலியில் நடைபெற்ற கலவரம் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துவிட்டது.
ஏனென்றால், அதே பகுதியை சேர்ந்த பெண்ணை பாஜக வேட்பாளராக களமிறக்கியது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாஜக வாங்க தேசத்தை கைப்பற்ற வாய்ப்பு இப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காலை 9.,30 மணி நிலவரப்படி, பாஜக 24 இடங்களை தக்க வைத்து முன்னிலை பெற்று வருகிறது திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 15 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது.. காங்கிரஸ் 2 இடங்களை பெற்றுள்ளது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், இதன் முடிவுகள் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.