ராகுல் காந்தி வயநாட்டு மக்களுக்கு துரோகம் செய்துள்ளார் - பாஜக கடும் தாக்கு!

Indian National Congress Rahul Gandhi BJP India
By Jiyath Jun 18, 2024 05:42 PM GMT
Report

வயநாடு தொகுதி மக்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார் என்று பாஜக முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

மக்களவை தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனிடையே வயநாடு தொகுதியை விட்டுக்கொடுத்து, ரேபரேலி தொகுதி எம்.பி.யாக அவர் நீடிப்பார் என காங்கிரஸ் நேற்று அறிவித்தது.

ராகுல் காந்தி வயநாட்டு மக்களுக்கு துரோகம் செய்துள்ளார் - பாஜக கடும் தாக்கு! | Bjp Leaders Attack Rahul Gandhi Vacating Wayanad

இந்நிலையில் வயநாடு தொகுதி மக்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார் என்று பாஜக முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர் "பிரியங்கா காந்திக்கு நாட்டில் எங்கிருந்தும் போட்டியிட உரிமை உண்டு. ஆனால் காங்கிரசின் இந்த முடிவால் பல கேள்விகள் எழுகின்றன.

திமுக ஆட்சியில் களவாடப்படுவது வாடிக்கை; தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்கள் - ஈபிஎஸ் கண்டனம்!

திமுக ஆட்சியில் களவாடப்படுவது வாடிக்கை; தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்கள் - ஈபிஎஸ் கண்டனம்!

துரோகம்

குறிப்பாக, ராகுல் காந்தி ரேபரேலியிலும் போட்டியிடப் போவதை வயநாடு மக்களிடம் மறைத்துவிட்டார். இவர்களை ஏமாற்றிவிட்டு, இன்று அவர்கள் நல்லெண்ணத்தில் அவருக்கு ஆதரவளித்து இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.

ராகுல் காந்தி வயநாட்டு மக்களுக்கு துரோகம் செய்துள்ளார் - பாஜக கடும் தாக்கு! | Bjp Leaders Attack Rahul Gandhi Vacating Wayanad

அவர்களுக்காக ஏதாவது செய்ய ரேபரேலி செல்கிறேன் என கைகழுவிக் கொண்டிருக்கிறார். இது வயநாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம். பிரியங்காவின் அரசியல் அறிமுகத்தை ஐ.யு.எம்.எல். ஆதரிப்பதால் அவருக்கு வெற்றி பெறுவது மிக எளிதாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.