பெண்கள் புழல் ஜெயிலுக்கு சென்ற பாஜக தலைவர் குஷ்பு - திடீர் ஆய்வு!
பாஜக தலைவர் குஷ்பு மகளிர் புழல் சிறையிக்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
குஷ்பு
பிரபல நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, பெண்கள் புழல் சிறையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இவரை பார்த்ததும் பெண் கைதிகள் உற்சாகம் அடைந்ததோடு தங்களின் நிலை குறித்து எடுத்துக் கூறினர்.
தொடர்ந்து, குஷ்பு அவர்களுக்கு நம்பிக்கையும், ஆறுதலும் அளிக்கும் வகையில் பேசினார். மேலும், பெண் கைதிகளுக்கு புது வாழ்க்கை அமைத்துக் கொடுப்பது பற்றி ஜெயிலர் உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
அறிவுரை
இதனை தொடர்ந்து, பேசிய குஷ்பு அங்குள்ள கைதிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதில் அவர் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திப்பது சில நேரங்களில் தவிர்க்க முடியாத ஒன்று என்றும் அதையும் கடக்க கற்றுக் கொண்டு துணிச்சலுடன் வாழ்வதற்கு வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும், இவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற அடிப்படையில் பெண்கள் சிறைக்கு ஆய்வு நடத்த சென்றதாக தெரிவித்தார். பின்னர், பெண்கள் சிறையில் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்கள் குறித்து கேட்டறிந்ததாகவும் தாம் எதிர்பார்த்ததை விட பெண் கைதிகள் சிறையை சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என பாராட்டியுள்ளார்.