தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள்

Tamil nadu BJP
By Irumporai Jul 20, 2022 10:54 AM GMT
Report

எல். முருகன்

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக 2019 ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டார்.

அவருக்குப் பிறகு, நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு புதிதாக தலைவர்கள் யாரும் நியமிக்கப்படாத நிலையில், பல மாதங்கள் கழித்து எல். முருகன் தலைவராக நியமிக்கப்பட்டார். 

தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் | Bharatiya Janata Party Politicians In Tamil Nadu

எச். ராஜா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன், கே.டி. ராகவன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ஆகியோரில் ஒருவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், எல். முருகனின் நியமனம் பலரது புருவங்களை உயர்த்தியது.

1977ல் நாமக்கல் மாவட்டம் கோனூரில் பிறந்த எல். முருகன், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த பிறகு, சென்னைப் பல்கலைக்கழத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அதற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

1977ல் நாமக்கல் மாவட்டம் கோனூரில் பிறந்த எல். முருகன், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த பிறகு, சென்னைப் பல்கலைக்கழத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அதற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் | Bharatiya Janata Party Politicians In Tamil Nadu

2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முன்னாள் சபாநாயகர் தனபாலை எதிர்த்து பா.ஜ.கவின் சார்பில் போட்டியிட்டார் முருகன்.

அந்தத் தேர்தலில் தனபால் வெற்றிபெற்றார். முருகன், 1730 வாக்குகளைப் பெற்று, மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 2018ஆம் ஆண்டுவாக்கில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக பணியாற்றிவந்தார்.

ஆணையத்தில் ஓராண்டு பதவிக்காலம் இருந்தபோதும், மாநில பா.ஜ.கவின் தலைவராக நியமிக்கப்பட்டார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலைசெய்துகொண்டபோது, அவரது தற்கொலைக்கு வெளிப்புற அழுத்தம் காரணமாக இருக்கலாம் என முருகன் தெரிவித்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது.

யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாசமாகப் பேசப்பட்ட விவகாரத்தை மாநிலம் தழுவிய பிரச்சனையாக முன்னிறுத்திய முருகன், அதற்காக வேல் யாத்திரை என்ற பெயரில் பயணம் மேற்கொண்டார்.

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்த பா.ஜ.க. 20 இடங்களைப் பெற்று, அதில் நான்கு இடங்களில் வெற்றிபெற்றது. இந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல். முருகன் தோல்வியடைந்தாலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க. உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடம்பெற்றது கவனிக்க வைத்தது.

தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்று, பிரதமரைச் சந்தித்துப் பேசிய எல். முருகன், தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அண்ணாமலை

தமிழகத்தின் கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய தந்தை பெயர் குப்புசாமி. இவருடைய தாய் பரமேஸ்வரி, மனைவி அகிலா சுவாமிநாதன். கோவையில் என்ஜினீயரிங் படித்த அண்ணாமலை, இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தார்.

தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் | Bharatiya Janata Party Politicians In Tamil Nadu

2011ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்வாகி கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார்.

இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டார். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் மூலம் பொதுமக்களால் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைக்கப் பெற்றார் 

இதனிடையே, கடந்த ஆண்டு மே மாதம் தனது ஐ.பி.எஸ். பணியை அண்ணாமலை ராஜினாமா செய்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், காக்கிச்சட்டை அணிந்து செயல்பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளையும் என்னால் மறக்க முடியாது.

தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் | Bharatiya Janata Party Politicians In Tamil Nadu

போலீஸ் பணி என்பது கடவுளுக்கு நெருக்கமான பணி என்பதை நம்புகிறேன். கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்றபோது வாழ்க்கையின் முக்கியத்துவம் பற்றி அறிந்தேன். ஐ.பி.எஸ். அதிகாரி மதுக்கர் செட்டியின் இறப்பும் என் வாழ்க்கையை சுயபரிசோதனை செய்ய தூண்டியது.

எனவே, 6 மாதங்களாக யோசித்து ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதனிடையே, கடந்த ஆண்டு மே மாதம் தனது ஐ.பி.எஸ். பணியை அண்ணாமலை ராஜினாமா செய்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், காக்கிச்சட்டை அணிந்து செயல்பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளையும் என்னால் மறக்க முடியாது.

போலீஸ் பணி என்பது கடவுளுக்கு நெருக்கமான பணி என்பதை நம்புகிறேன். கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்றபோது வாழ்க்கையின் முக்கியத்துவம் பற்றி அறிந்தேன். ஐ.பி.எஸ். அதிகாரி மதுக்கர் செட்டியின் இறப்பும் என் வாழ்க்கையை சுயபரிசோதனை செய்ய தூண்டியது.

எனவே, 6 மாதங்களாக யோசித்து ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார். அதன் பின்னர் விவசாய பணியினை செய்து வந்த அண்ணாமலை வீ தி லீடர்’ என்ற அமைப்பை ஆரம்பித்தார். அது அரசியல் அமைப்பு அல்ல என்றும் அரசியலைத் தூய்மைப்படுத்தும் அமைப்பு என்றும் தெரிவித்தார்.

தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் | Bharatiya Janata Party Politicians In Tamil Nadu

மக்களிடன் விழிப்பிணர்வை ஏற்படுத்துவதற்காக அதனை ஆரம்பித்ததாக தெரிவித்தார். பல சமூக பணிகளைஅதன் மூலமாக செய்யப்போவதாகவும் தெரிவித்தார். மேலும், இயற்கை விவசாயம் செய்யப்போவதாகவும், நாட்டுமாடுகளை வளர்க்கப் போவதாகவும் தெரிவித்தார்.

அதற்கான பணிகளையும் அவர் செய்து வந்தார். அதன் பின்னர் சி.ஏ.ஏ. விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தாக கூறப்பட்டது. இந்த நிலையில், பாஜகவின் தமிழக மாநிலத்தலைவராக அண்ணாமலை இருந்து வருகிறார்.

பொன்ராதா கிருஷ்ணன்

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் அளந்தங்கரை கிராமத்தில் மார்ச் 01, 1952 ஆம் ஆண்டு பொன்னையா ஐயப்பன் மற்றும் தங்ககனி ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் தான் பொன்ராதா கிருஷ்ணன்.

நாகர்கோவில் கோட்டாரில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் கல்லூரி படிப்பை விருதுநகரிலும், சட்டப் படிப்பை சென்னை சட்டக்கல்லூரியில் படித்தார். அரசியல் பணியில் இருந்த இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

தமிழகத்தின் பாஜக-ன் வளர்ச்சிக்காக தீவிரமாக செயல்படும் பா.ஜ.க தலைவர்களில் முக்கியமானவர் பொன்.ராதாகிருஷ்ணன். வழக்கறிஞரான இவர் கன்னியாகுமரியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

2017 ஆம் ஆண்டு இவர், மத்திய நிதித்துறை இணை அமைச்சராகவும், கப்பல் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.   1991 முதல் தொடர்ந்து நாகர்கோவில் தொகுதியில் இருந்து ஐந்து முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

இருப்பினும் அந்த ஐந்து தேர்தல்களில் நான்கு முறை தோல்வியடைந்த பொன். இராதாகிருஷ்ணன் 1999 மக்களவைத் தேர்தலில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆயினும் 2014 ஆம் ஆண்டு கன்னியாகுமரி தொகுதியில் 16 வது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

1999-2004 காலகட்டத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழிசைசெளந்தரராஜன்

1961- ஆம் ஆண்டு நாகர்கோவிலில், ஒரு பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர் தமிழிசை. முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தனின் மகள் தமிழிசை.

சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவப்படிப்பை முடித்த அவர், பின்னர் தனது மருத்துவ மேற்படிப்பை முடித்தார். இவரது கணவர் சௌந்தரராஜனும் ஒரு மருத்துவர்.

தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் | Bharatiya Janata Party Politicians In Tamil Nadu

தமிழிசையின் தந்தை குமரி அனந்தன், பாரம்பரிய காங்கிரஸ்காரர் என்ற போதிலும், யாரும் எதிர்பாராமல் தனது விருப்பத்திற்கேற்ப பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார் தமிழிசை.

அரசியலில் வெவ்வேறு துருவங்களாக இருந்தபோதிலும், விமர்சனங்களை தாண்டி, 'எனது திருமணத்தை நடத்தி வைத்தவர் கருணாநிதி' என்று நெகிழ்ச்சியாக பலமுறை தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் | Bharatiya Janata Party Politicians In Tamil Nadu

நரேந்திர மோதி முதல்முறையாக பிரதமராக பதவியேற்ற 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழக பாஜக தலைவராக தமிழிசை நியமிக்கப்பட்டார்.நாடு முழுவதும் பாஜக வென்ற போதிலும், தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் பாஜகவுக்கு பெரிய வாக்குவங்கி இல்லை என்று கருதப்பட்ட நிலையில், மாநில பாஜக தலைவராக இருந்த தமிழிசைக்கு பொறுப்புகளும், சவால்களும் அதிகமாகவே இருந்தன.

நாடு முழுவதும் பாஜக வென்ற போதிலும், தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் பாஜகவுக்கு பெரிய வாக்குவங்கி இல்லை என்று கருதப்பட்ட நிலையில், மாநில பாஜக தலைவராக இருந்த தமிழிசைக்கு பொறுப்புகளும், சவால்களும் அதிகமாகவே இருந்தன.

தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் | Bharatiya Janata Party Politicians In Tamil Nadu

தமிழக தலைவர்களில் சமூகவலைதளங்களில் மிகவும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டவர் தமிழிசை. அவரது அரசியல் அணுகுமுறையை தாண்டி அவரது சிகையலங்காரம் போன்ற தனிப்பட்ட விஷயங்களைகூட பலர் கிண்டல் செய்தபோதும், அதனை இயல்பாக எடுத்துக்கொண்டு, அது தன் அரசியல் பணியை பாதிக்காதவாறு அவர் செயலாற்றிய விதம் பலரின் பாராட்டுகளையும் பெற்றுத்தந்தது.

குறிப்பாக அவரது பிறந்த நாளுக்கு எதிர்கட்சியினை சேர்ந்த உறுப்பினர்கள் அவரை விட வயது குறைவானவர்கள் அக்கா என்றே வாழ்த்து கூறுவார்கள்தொடர்ந்து கட்சிக்காக அவர் உழைத்து வந்த போதிலும், தமிழக சூழலில் கடுமையான சவால்களை எதிர்கொண்டபோதிலும், கடுமையாக உழைத்தும் கூட, தேசிய அளவில் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கருத்து அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் நிலவிவந்தது. 

அதற்கு பதில்கூறும் வகையில் தற்போது தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து கட்சிக்காக அவர் உழைத்து வந்த போதிலும், தமிழக சூழலில் கடுமையான சவால்களை எதிர்கொண்டபோதிலும், கடுமையாக உழைத்தும் கூட, தேசிய அளவில் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கருத்து அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் நிலவிவந்தது.

அதற்கு பதில்கூறும் வகையில் தற்போது தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை இருந்து வருகிறார்.கடுமையான விமர்சனங்கள், தனிநபர் தாக்குதல்கள் போன்றவற்றை துடைத்தெறிந்து சிறந்த ஆளுமையாக இருந்து வருகிறார் தமிழிசை செளந்தர்ராஜன்.

 வானதி சீனிவாசன்

தமிழகத்தில் பாஜகவை பிரபலப்படுத்தியதில் மாநில பாஜக முன்னாள் தலைவரும், இன்னாள் தெலங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனுக்கு எந்த அளவுக்கு பங்கு உள்ளதோ, அவர் அளவுக்கு பாஜகவை வளர்த்ததில் வானதி சீனிவாசனுக்கு பங்கு உண்டு.

1970 ஜூன் 6 ஆம் தேதி, கோவை மாவட்டம், தொண்டமுத்தூர் அருகே உள்ள உலியம்பாளையம் கிராமத்தில் கந்தசாமி -பூவாத்தாள் தம்பதிக்கு தலைமகளாக வானதி சீனிவாசன் பிறந்தார்.

தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் | Bharatiya Janata Party Politicians In Tamil Nadu

பிளல் 2 பொதுத் தேர்வில் வேதியியல் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்ததன் காரணமாக, கோவையில் பிரபலமான பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டப்படிப்பு பயின்றார்.

அதன் பின் சட்டப்படிப்பில் ஏற்பட்ட ஆர்வத்தின் விளைவாக சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரியில் 1993 இல் பி.எல். பட்டம் பெற்றார்  20 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்த அனுபவம் இவருக்கு உண்டு.

சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி இக்பால், கடந்த 2012 இல் சிறந்த பெண் வழக்கறிஞருக்கான விருதை இவருக்கு அளித்து கெளரவித்தார்.

தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் | Bharatiya Janata Party Politicians In Tamil Nadu

தனது கீச் குரலில் தொஸைகாட்சி விவாதங்களில் பாஜகவுக்காக வாதாடுவதில் இருந்து பல்வேறு அரசியல் போராட்டங்களில் பங்கேற்பது வரை பாஜகவுக்காக இவர் ஆற்றிவரும் பங்கு அளப்பரியது.

வானதி சீனிவாசனின் நீண்ட அரசியல் பயணம், அவரது கல்வி, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இங்கு பார்ப்போம் வாருங்கள். 1988 - ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்தி பரிஷத்தின் (ABVP) செயல் உறுப்பினராக வானதி சீனிவாசனின் அரசியல் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

அதன்பின் கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஏபிவிபி பிரிவு செயலாளராக நியமனம். அப்படியே, ஏபிவிபி கோவை மாநகர் இணை செயலாளர் பொறுப்பு.

தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் | Bharatiya Janata Party Politicians In Tamil Nadu

1993 இல் பாஜகவின் அடிப்படை உறுப்பினராக வானதி சீனிவாசனின் நேரடி அரசியல் பயணம் 1993 இல் தொடங்கியது. பாஜக சார்பில் இவர் நூற்றுக்கணக்கான போராட்டங்களில் பங்கெடுத்திருந்தாலும், தமிழகத்தில் மதுபான கடைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி இவர் முன்னெடுத்த போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.

இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்து அதில் இவர் வெற்றியும் பெற்றுள்ளார். 2013 இல் பாஜக மாநில செயலாளர், 2014 இல் தமிழக பாஜகவின் மாநில பொது செயலாளர் என்று வானதி சீனிவாசனின் வளர்ச்சி சீரானது.

2020 வரை கட்சியின் மாநில பொது செயலாளராக பதவி வகித்த இவர், கடந்த ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி முதல் பாஜக மகளிரணியின் தேசிய தலைவராக பதவி வகித்து வந்த இவர் தற்போது கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

ஹெச்.ராஜா

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் வேதாளத்தை மீண்டும் முதுகில் சுமந்தபடி..' எனச் சொல்லத்தக்க வகையில், தேர்தலில் எத்தனை முறை போட்டியிட்டுத் தோல்வியடைந்தாலும், மனம் தளராது மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுபவர் பா.ஜ.க-வின் முன்னாள் தேசிய செயலாளரான ஹெச்.ராஜா

ஹெச் ராஜா 1957 செப்டம்பர் 29 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மெலட்டூர் கிராமத்தில் பிறந்தார். காரைக்குடி அழகப்பா தொடக்கப்பள்ளியில் கல்வி பயின்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்ஆர். எஸ். எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர். 

2014 இல் பாஜகவின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டு குழு தலைவராகப் பதவி வகிக்கின்றார். 1999, 2014, 2019 என்ற மூன்று முறை எம்.பி. தேர்தலில் சிவகங்கை நாடாளுன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

இதேபோன்று 2006 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை ஆலந்தூர் தொகுதியிலும், 2016 தியாகராய நகரிலும் போட்டியிட்டு தோல்வி கண்டனார். ஆறுதலாக 2001 இல் காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.

தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் | Bharatiya Janata Party Politicians In Tamil Nadu

அரசியல் எதிர்வினை ஆற்றுபவர்களை "தேச விரோதிகள்" என்பதும், கேள்வி எழுப்பும் பத்திரிகையாளரையும், அரசை விமர்சிப்பவர்களையும் தேச விரோதிகள் என கூறி சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாவது இவரது வாடிக்கை.

இடதுசாரி தலைவரான டி. ராஜா மீது தனிப்பட்ட முறையில் விமர்சித்ததற்காக பாஜகவின் மூத்த தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவின் கண்டனத்திற்கு ஆளானவர் ஹெச்.ராஜா.

தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் | Bharatiya Janata Party Politicians In Tamil Nadu

சாரணிய இயக்க தேர்தலில் போட்டியிட்டு 52 வாக்குகள் மட்டுமே தோல்வியை தழுவியபோது, தேர்தல் முறையாக நடைபெறவில்லை என குற்றம்சாட்டினார்.

சென்னை உயர் நீதிமன்றம் குறித்து இவர் கூறிய தகாத வார்த்தை பெரும் சர்ச்சைக்குள்ளானது.பெரியார் சிலை தொடர்பாக ஹெச்.ராஜா தெரிவித்த கருத்துக்கள் தமிழக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இல.கணேசன்

தஞ்சாவூரில் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் இலக்குமிராகவன் - அலமேலு தம்பதியின் மகனாகப் பிறந்தார். சிறுவயதில் தந்தையை இழந்ததால் அண்ணன் அரவணைப்பில் வளர்ந்தார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டு திருமணம் செய்யாமலும், தனது வேலையை விட்டுவிட்டும் முழுநேர செயல்பாட்டாளராக பொதுவாழ்விற்கு வந்தார். இவர் தெலுங்கு பிராமண வகுப்பை சேர்த்தவர். 

தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் | Bharatiya Janata Party Politicians In Tamil Nadu

இவர் பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவர். 1991 இல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார். 2009 மக்களவை தேர்தலிலும், 2014 மக்களவை தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் இள கணேசனின் அரசியல் பணியினை கெளரவிக்கும் விதமாக மணிப்பூர் கவர்னரா பதவி வழங்கி சிறப்பித்துள்ளது.

தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் | Bharatiya Janata Party Politicians In Tamil Nadu

கவர்னராக நியமனம் செய்யப்பட்டது குறித்து இல.கணேசன் கூறுகையில், எனது சேவை அங்கீகரிக்கப்பட்டது குறித்து மிகவும் பெருமையாக உள்ளது. இந்தியாவில், எந்த இடத்திலும் பணிபுரிவதற்கு தயாராக உள்ளேன். எனது அனுபவம் மூலம், ஒட்டு மொத்த இந்தியாவும் ஒன்றே. இவ்வாறு அவர் கூறினார்.

குஷ்பு

தமிழகத்தில் குஷ்புவுக்கு கோவில் கட்டிய போது, ‘நடிகைக்கு கோவிலா’ என்று அரசியலில் அது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. 90 களில் தமிழ்சினிமாவின் தேவதையாக, அன்றைய இளைஞர்களின் கவர்ச்சி கன்னியாக குஷ்பு வலம் வந்ததால் கோவில் மட்டுமல்ல தெரு ஓர ஆயாக்கடை இட்லிக்கும் ”குஷ்பு இட்லி” என்று பெயர் வைக்கப்பட்டு குஷ்பு ஒரு நடிகை என்பதை தாண்டி தமிழ் சினிமாவின் பிராண்டாக மாற்றினார் .

தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் | Bharatiya Janata Party Politicians In Tamil Nadu

நடிகைக்கு கோவிலா என்ற விமர்சனம் அடங்குவதற்குள் அவர் திருமணத்துக்கு முந்தைய பாதுகாப்பான உடலுறவு குறித்து கருத்தை சொல்ல கலாச்சார காவலர்களே கட்டிய கோவிலை இடிக்கவும் செய்தார்கள்.

தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் | Bharatiya Janata Party Politicians In Tamil Nadu

வடநாட்டு கலாச்சாரத்தை பார்த்து வளர்ந்த ஒருவருடைய பார்வை பாலியல் சார்ந்தும் உடலுறவு சார்ந்தும் எத்தகையது என்று யோசிப்பதற்கு முன்னே ஏதோ தமிழகத்தில் குஷ்பு பிறந்தது போன்றும் தமிழ் கலாச்சாரத்துக்கு கேடு உண்டாக்கி விட்டதாகவும் கோவில் கட்டி கும்பிட்ட ஊரில் குஷ்புவை தூற்றியதும், துடைப்பத்தோடு அவர் வீட்டு வாசலில் பெண்கள் நின்றதும் அரங்கேறியது.

தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் | Bharatiya Janata Party Politicians In Tamil Nadu

பின்னர் நடிகை , சின்னத்தைரை நடிகை நிகழ்ச்சி தொகுப்பாளர் என இருந்து வந்த குஷ்பு திமுகவுக்கு ஆதரவகா கருத்துக்களை கூறி வந்தார் அதே சமயம் அங்கு எழுந்த கருத்து மோதல் காரணமாக தமிழக காங்கிரஸின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார் .

தாமரை மலர்ந்தே தீரும் : தமிழகத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் | Bharatiya Janata Party Politicians In Tamil Nadu

அங்கும் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ்லிலிருந்து விலகினார். அதன் பிறகு டெல்லியில் இருந்து திரும்பிய குஷ்புவை பாஜக நிர்வாகிகள் தொடர்பு கொண்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது அதை தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் சி.டி ரவி, அப்போதைய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்து தமிழக பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றார்.