சிறுநீரை வாயால் சுத்தம் செய்ய வைத்த கொடூரம் - பாஜக பெண் பிரமுகர் கைது!
வீட்டு வேலைக்கார பெண்ணை கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்ட பாஜக பெண் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக நிர்வாகி சீமா
ஜார்க்கண்ட்டில் பாஜக நிர்வாகியாக இருப்பவர் சீமா பத்ரா. இவர் தனது வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணை கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து அந்த வேலைக்கார பெண் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. அதில், சீமா வேலைக்காரப் பெண்ணை அடிக்கடி அடித்து உதைத்ததோடு, இரும்பு கம்பியால் அடித்து பல்லை உடைத்துள்ளார். சூடான பாத்திரத்தால் அடித்ததில் சுனிதாவிற்கு உடல் முழுக்க காயம் ஏற்பட்டுள்ளது.
கொடூரத்தின் உச்சம்
தரையில் உள்ள சிறுநீரை வாயால் நக்கி சுத்தம் செய்யும்படி கூறி சீமா சித்ரவதை செய்ததோடு, சரியாக சாப்பாடும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், கடந்தவாரம் ராஞ்சியில் சீமாவின் வீட்டிலிருந்து வேலைக்கார பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த மாநில ஆளுநர் ரமேஷ் மாநில டி.ஜி.பி நீரஜ் சின்ஹாவை சந்தித்துப் பேசினார். வேலைக்கார பெண் மனிதாபிமானமற்ற வகையில் நடத்தப்பட்டது குறித்து கவலை தெரிவித்தார்.
தீண்டாமை
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவியான சீமா மீது நடவடிக்கை எடுக்க தாமதமாவது குறித்து கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து, பாஜக நிர்வாகி சீமாவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில், சீமா வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆதிவாசி சமுதாயத்தைச் சேர்ந்த சுனிதா வீட்டு வேலை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.