முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் எம்.பி. கனிமொழி பற்றி அவதூறு பேச்சு - பா.ஜ.க தலைவர் கைது!
திமுக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் மின்சாரக் கட்டணம் உயர்வு, வரையறையில்லாமல் அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்றும் , உள்ளிட்ட 10 முக்கிய அம்சங்களை முன்வைத்து நேற்று முழுவதும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதில் விழுப்புரம் தெற்கு மாவட்ட விக்கிரவாண்டியில் பாஜக சார்பில் மாவட்ட தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கலிவரதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாஜக தலைவர் கைது
இந்நிலையில், அவர் மேடையில் பேசும்போது திமுக முன்னாள் தலைவர் கலைஞர் குறித்தும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி. குறித்தும் அவதூறாகப் பேசியுள்ளார்.
இதனால் திமுக சார்பில் காவல் நிலையத்தில் கலிவரதன் மீது புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து இவரது அவதூறு பேச்சின் காரணமாக கைது செய்யப்பட்டார். மேலும், இவர் மீது ஒரு பாலியல் புகார் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.