எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அழிவு ஆரம்பம் - முதல்வரை மறைமுகமாக தாக்கிய அண்ணாமலை!
தமிழ் மொழியைச் சொல்லி அரசியல் செய்யும் திமுக இதற்கு வெட்கப்பட வேண்டும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக
சென்னை திருவான்மியூரில் தமிழக பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை,மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், சக்கரவர்த்தி, நாராயணன் திருப்பதி, அமர்பிரசாத் ரெட்டி தமிழிசை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை,’இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 60 லட்சம் பேர் பயனடைகின்றனர்என்று கூறினார்.
அண்ணாமலை
தொடர்ந்து பேசியவர்,’’தாய்மொழி தமிழில் தமிழக மாணவர்கள் பின்தங்கி உள்ளதாக ஓர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் மொழியைச் சொல்லி அரசியல் செய்யும் திமுக இதற்கு வெட்கப்பட வேண்டும் என்று குற்றம்சாட்டியுள்ளார்.மேலும், உலக நாடுகள் வியக்கும் வகையில் பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது.
அனைத்து இடங்களிலும் மரியாதை இருக்கும் தலைவர் பிரதமர் மோடி போல் ஆளுநரும், அண்ணாமலையும் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் சொல்கிறார். ஒரு மனிதனுக்கு எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அழிவு ஆரம்பமாகிவிட்டதாக அர்த்தம் என்று கூறினார்.