விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் - எல். முருகன்!
விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.
எல். முருகன்
சென்னை திருவல்லிக்கேணியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "அமெரிக்கா பயணம் எதற்கு என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
எத்தனை நிறுவனங்களை சந்திக்கிறார்கள் என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். எத்தனை நிறுவனங்களின் முதலீடுகளை கொண்டு வருகிறார்கள் என்பது தெரியும். அமெரிக்கா சென்று வந்த பிறகு, அவர்களது செயல்பாடுகள் எல்லாம் வெளிப்படையாக அறிவிக்கும் போதுதான் அதன் பயன் நமக்கு தெரியும்.
உண்மை வெளிவரும்
விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரித்தால் தான், விஷ சாராய சம்பவத்தில் உண்மை வெளிவரும். மரக்காணம் கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடி விசாரித்தது, அந்த வழக்கு என்ன ஆனது?
போலீசாரை கையில் வைத்திருக்கும், முதலமைச்சர் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பட்டியலின மக்களுக்கான நலத்திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.