பெங்களுரு குண்டு வெடிப்பு - தமிழகத்தில் இருந்து வந்தவரே வைத்தார் - பாஜக இணையமைச்சர் சர்ச்சை பேச்சு
பெங்களூரு குண்டு வெடிப்பில் தமிழகத்தை இணைத்து பாஜகவின் கர்நாடக எம்.பி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் கஃபே
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள மிகவும் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ராமேஸ்வரம் கஃபே ஒயிட் லீட் கிளை 80 அடி சாலையில் அமைந்திருக்கிறது.
இந்த உணவகத்தில் தினமும் பல நூறுகணக்கான மக்கள் வந்து செல்வர். இந்த உணவகத்தில் அண்மையில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்து நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சர்ச்சை பேச்சு
இந்த வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு ஒருவரை கைது செய்துள்ள நிலையில், இன்னும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த சூழலில் தான், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜகவின் இணையமைச்சர் பேசியுள்ள கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளும், எதிர்ப்புகளையும் சம்பாதித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது கூறினார்.
தேர்தல் நெருங்கும் சூழலில் மத்திய இணையமைச்சரான ஷோபா கரந்தலாஜேவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.