அம்பானியும் விரும்பும் உணவு - ராமேஸ்வரம் கஃபே உரிமையாளர்களின் பரபரப்பு பின்னணி..?

Karnataka Bomb Blast
By Karthick Mar 02, 2024 11:40 AM GMT
Report

பெங்களூருவில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கஃபேதொடர் தலைப்பு செய்தியாக இருந்து வருகின்றது.

ராமேஸ்வரம் கஃபே

கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள மிகவும் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ராமேஸ்வரம் கஃபே ஒயிட் லீட் கிளை 80 அடி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த உணவகத்தில் தினமும் பல நூறுகணக்கான மக்கள் வந்து செல்வர்.

bangalore-rameshwaram-cafe-owners-details

இந்த உணவகத்தில் நேற்றைய தினம் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்து நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிகுண்டு விபத்து தொடர்பாக தற்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் சூழலில், அந்த உணவகத்தின் உரிமையாளர்களை குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

பெங்களூரில் பிரபல உணவகத்தில் குண்டு வெடிப்பு; வெளியான சிசிடிவி காட்சிகள் - நடந்தது என்ன?

பெங்களூரில் பிரபல உணவகத்தில் குண்டு வெடிப்பு; வெளியான சிசிடிவி காட்சிகள் - நடந்தது என்ன?

உரிமையாளர்கள்

இந்த உணவகத்தை பெங்களூரைச் சேர்ந்த திவ்யா மற்றும் ராகவேந்திர ராவ் ஆகியோரால் நடத்தப்படுகிறது. இதில் மெக்கானிக்கல் இன்ஜினியரான ராகவேந்திரா ராவ் சமையலில் அதிக ஆர்வம் கொண்டவர்.

bangalore-rameshwaram-cafe-owners-details

அகமதாபாத்தில் ஐஐஎம் படித்த பட்டதாரியான பெங்களூருவைச் சேர்ந்த திவ்யாவிற்கும் உணவாக தொழில் மீது அதீத ஆர்வம் இருந்துள்ளது. இதன் காரணமாக, தொழில் துவங்கிய இருவரும் பின் நாளில் வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்துள்ளனர்.

bangalore-rameshwaram-cafe-owners-details

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்கு தென்னிந்திய உணவுகளை வழங்கும் பொறுப்பை ராமேஸ்வரம் கஃபே தான் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.