20 தொகுதிகளில் போட்டி; மீதி கூட்டணி கட்சிகளுக்கு - பாஜக முடிவு!
தமிழகத்தில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பாஜக :
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான முன் தயாரிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
ஆளும் கட்சியான பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்க பல்வேறு முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. பாஜக தனது செல்வாக்கை மாநிலங்களில் பல அளவு உயர்த்தியிருந்தாலும், தமிழ்நாட்டில் அதன் ஆதிக்கம் குறைவுதான்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 30% வாக்குகளை உடைய மிகப்பெரிய கட்சியான அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்திருந்தது. தற்போது, தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என்று அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
கூட்டணி?
இந்நிலையில், பெரிய கட்சியின் கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிடும் நிலைமை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களது பலத்தை பெருக்க இரண்டாம் நிலையில் இருக்கும் சில உதிரி கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அண்ணாமலை முயன்று வருகிறார்.
இதனையடுத்து, வரும் மக்களவை தேர்தலில் 20 தொகுதிகளில் பாஜகவும், மீதமுள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கும் வழங்கும் திட்டம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாஜகவுடன் புதிய நீதிக்கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகள் இணைந்து உள்ளதால் மீதமுள்ள தொகுதிகளில் இந்த கட்சிகள் போட்டியிடலாம் என்று தெரியவந்துள்ளது.