பெரும்பான்மை இழந்த பாஜக; பின்வாங்கிய சுயேட்சைகள் - எங்கு தெரியுமா?
பாஜக அரசுக்கான ஆதரவை சுயேச்சைகள் வாபஸ் பெற்றுள்ளன.
சுயேச்சைகள் வாபஸ்
ஹரியானா, சட்டப்பேரவைக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில், 40 இடங்களை பாஜக பிடித்தது. முதலமைச்சராக மனோகர் லால் கட்டார் பதவியேற்றார்.

தொடர்ந்து, மக்களவைத் தேர்தலுக்கான பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாத நிலையில், பாஜகவுக்கு அளித்துவந்த ஆதரவை துஷ்யந்த் சவுதாலா கட்சி வாபஸ் பெற்றது.
6 சுயேட்சைகள் மற்றும் ஹரியானா லோக்கித் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியை பாஜக தக்கவைத்தது. இருப்பினும், மனோகர் லால் கட்டாருக்குப் பதிலாக, புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்றார். இந்நிலையில், பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக 3 சுயேச்சை எம்எல்ஏ-க்கள் அறிவித்துள்ளனர்.
பாஜக-வின் பலம்?
தற்போதைய நிலையில், 88 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக 40 இடங்களைப் பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 பேர், ஹரியானா லோகித் கட்சியின் ஒரு எம்எல்ஏ ஆகியோரின் ஆதரவுடன் பாஜக-வின் பலம் 43-ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 30 எம்எல்ஏ-க்கள் உள்ளனர்.

இந்திய தேசிய லோக்தளம் கட்சியின ஒரு எம்எல்ஏ, சுயேச்சைகள் 4 பேர் ஆதரவுடன் காங்கிரஸின் பலம் 35-ஆக உள்ளது. பெரும்பான்மை பலத்தை பாஜக இழந்துள்ளதால்,
முதலமைச்சர் பதவியிலிருந்து நயாப் சிங் சைனி உடனடியாக விலக வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பானு வலியுறுத்தியுள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, உடனடியாக தேர்தலை நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ஒரு மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அரசு அறிவிப்பு IBC Tamil
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan