தமிழ்நாட்டிற்கு பாஜக அரசு பச்சைத் துரோகம் செய்துள்ளது - வைகோ கண்டனம்!

Marumalarchi Dravida Munnetra Kazhagam Vaiko Tamil nadu
By Jiyath Apr 28, 2024 12:10 PM GMT
Report

மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

வைகோ 

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட இயற்கை பேரிடர், மிச்சாங் புயல் மற்றும் மழை வெள்ளப் பாதிப்புகளுக்காக தமிழ்நாட்டிற்கு ரூ.37,907 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

தமிழ்நாட்டிற்கு பாஜக அரசு பச்சைத் துரோகம் செய்துள்ளது - வைகோ கண்டனம்! | Vaiko Strongly Condemns Central Governments

டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிச்சாங் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பெருமழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் ஆக மொத்தம் ரூ.276 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

மத்தியில் இதை செய்யும் அரசுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் - கடம்பூர் ராஜூ திட்டவட்டம்!

மத்தியில் இதை செய்யும் அரசுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் - கடம்பூர் ராஜூ திட்டவட்டம்!

கண்டனம் 

தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில், ஒன்றிய அரசு ஒரு சதவீதத்திற்கு கீழே அதாவது 0.78 சதவீதம் மட்டுமே இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்காக தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு பாஜக அரசு பச்சைத் துரோகம் செய்துள்ளது - வைகோ கண்டனம்! | Vaiko Strongly Condemns Central Governments

ஆனால் கர்நாடக மாநிலத்திற்கு வறட்சி பாதிப்புக்காக மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.3498.82 கோடி அளித்திருக்கிறது. அதிக வரி அளிக்கும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. அரசு நிதி பகிர்வில் பச்சைத் துரோகம் இழைத்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்" என்று தெரிவித்துள்ளார்.