ஓபிஎஸ் கண் முன்னே பிரச்சாரத்தில் தாக்கப்பட்ட பாஜக மாவட்டத் தலைவர்? பரபரப்பு பின்னணி
ராமநாதபுரத்தில் சுயேச்சை வேட்பாளராக பாஜகவின் ஆதரவில் களமிறங்கியிருக்கின்றார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் - பாஜக கூட்டணி
ராமநாதபுர தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் போட்டியிடும் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
அவருக்கு ஆதரவாக அம்மாவட்ட பாஜக நிர்வாகிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அமமுக - பாஜக - தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணி இருக்கும் காரணத்தால், ஓபிஎஸ் கூட்டணி கட்சி நிர்வாககிகளை பிரச்சாரத்திற்கு உடன் அழைத்து செல்கிறார்.
நேற்று இரவு ராமநாதபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பன்னீர்செல்வத்துடன் பாஜக மாவட்டத் தலைவர் தரணி முருகேசனும் கலந்துகொண்டார். பிரச்சாரத்தின் போது, சூரன்கோட்டை பகுதியில் பிரசாரம் செய்வதில் இருதரப்பிற்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதல்
இதன் காரணமாக ஓபிஎஸ் அணியை சேர்ந்த ராமநாதபுரம் ஒன்றியச் செயலாளர் முத்துமுருகன், தரணி முருகேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி அவரை தாக்கியதாகவும் கூறப்படும் நிலையில், இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பிரசாரத்தில் பங்கேற்காமல் தரணி அங்கிருந்து கிளம்பிவிட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, தரணி முருகேசனிடம் பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலையும் சமாதனம் பேசியதாக கூறப்படுகிறது