பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷணுக்கு சீட் கொடுக்காத பாஜகவின் ராஜா தந்திரம்
பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு வாய்ப்பை மறுத்துள்ளது பாஜக.
பிரிஜ் பூஷண் சிங்
சில மாதங்கள் முன்பு மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக அப்போது இருந்த பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக எழுப்பிய புகார்கள் தொடர்ந்து போராட்டங்களாக மாறி, கோர்ட் படிகளை நாடியது.
இதற்கிடையில் மத்திய பாஜக எம்.பி.யான பிரிஜ் பூஷன் இந்த புகார்களை முற்றிலுமாக மறுத்திருந்தார். இந்த புகார்கள் ஒருபுறம் இருக்க, மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இது சாக்ஷி மாலிக் தோற்றத்தை அடுத்து தான் மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.
மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் பிரிஜ் பூஷண் சரண் சிங். பாஜகவின் எம்.பி'யான் அவர் மீது எழுந்த குற்றசாட்டுக்கள் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பாஜக ராஜதந்திரம்
இந்த சூழலில் தான், அண்மையில் உத்திரபிரதேச மாநிலத்தின் பாஜக வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. 80 தொகுதிகளை கொண்ட உத்திர பிரதேசம் பாஜகவின் வெற்றிக்கு மிக முக்கிய மாநிலமாக திகழ்கிறது. இந்த சூழலில் தான், அம்மாநிலத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் இம்முறை பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக அவரின் மகனான கரண் பிரிஜ் பூஷண் சிங்கிற்கு சீட் கொடுத்துள்ளது பாஜக.
2009-ஆம் ஆண்டு முதல் கைசர்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு வந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் அத்தொகுதியியல் செல்வாக்கு மிக்க நபராகவே உள்ளார்.