மல்யுத்த சம்மேளனத்திற்கும் எனக்கும் இனி சம்பந்தம் இல்லை...பிரிஜ் பூஷன் பரபரப்பு..!
தொடர்ந்து பரபரப்பான திருப்பங்களை கண்டு வரும் மல்யுத்த சம்மேளனத்தில் மீண்டும் ஒரு பரபரப்பு திருப்பும் ஏற்பட்டுள்ளது.
மல்யுத்த விவகாரம்
சில மாதங்கள் முன்பு மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக அப்போது இருந்த பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக எழுப்பிய புகார்கள் தொடர்ந்து போராட்டங்களாக மாறி, கோர்ட் படிகளை நாடியது.
இதற்கிடையில் மத்திய பாஜக எம்.பி.யான பிரிஜ் பூஷன் இந்த புகார்களை முற்றிலுமாக மறுத்திருந்தார். இந்த புகார்கள் ஒருபுறம் இருக்க, மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இது சாக்ஷி மாலிக் தோற்றத்தை அடுத்து தான் மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.
எந்த சம்மந்தமும் இல்லை
அதே நேரத்தில், புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சஞ்சய் சிங் என்பவர், முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர் என்றும் அவரின் உறவினர் என்றெல்லாம் கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தான் தற்போது மல்யுத்தத்துடனான உறவை துண்டித்துவிட்டேன் என பிரிஜ் பூஷன் சிங் அறிவித்துள்ளார்.
மேலும், தான் அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்ததற்கும் இதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சாக்ஷி மாலிக் இனி மல்யுத்ததிற்கு வர மாட்டேன் என கூறிய நிலையில், பிரிஜ் பூஷன் சிங்கும் இனி தனக்கும் மல்யுத்த சம்மேளனத்திற்கும் இனி சம்பந்தம் இல்லை என கூறியிருப்பது பெரும் சலசலப்பை உண்டாகி இருக்கின்றது.