மக்களவை தேர்தல்: பாஜக 20 தொகுதிகளில் போட்டி - ஓபிஎஸ்ஸுக்கு இடமில்லையா?
மக்களவை தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதிப் பங்கீடு
தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதில் 20 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களும்,
தாமரை சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் 4 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளும், பாமகவுக்கு 10 தொகுதிகளும்,
அண்ணாமலை
அமமுகவுக்கு 2 தொகுதிகளிலும் ஒதுக்கீடு செய்யப்பல்லுள்ளது. அதேபோல இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலா ஒரு தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், 24 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் உடன் டெல்லி செல்வதாக அண்ணாமலை கூறினார். மேலும், தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுவிட்டதால், ஓ.பன்னீர்செல்வம் அணி போட்டியிட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.