விளவங்கோடு இடைத்தேர்தல்: அதிமுக களமிறக்கும் ராணி; பாஜக சார்பில் போட்டியிடுவாரா விஜயதாரணி?

Tamil nadu ADMK BJP Kanyakumari Election
By Jiyath Mar 21, 2024 07:49 AM GMT
Report

விளவங்கோடு தொகுதிக்கு ராணி என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது அதிமுக.  

இடைத்தேர்தல்

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலோடு, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. கடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற விஜயதாரணி, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.

விளவங்கோடு இடைத்தேர்தல்: அதிமுக களமிறக்கும் ராணி; பாஜக சார்பில் போட்டியிடுவாரா விஜயதாரணி? | Admk Announces Candidate Vilavancode By Election

மேலும், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. இந்த தொகுதி கடந்த 1971-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தலை எதிர்கொண்டு, 12 பொதுத் தேர்தல்களை சந்தித்துள்ளது.

2026 தேர்தலில் நான் யார் என்பதைக் காட்டுவேன்; அதிமுக ஒரே அணியாக போட்டி - சசிகலா!

2026 தேர்தலில் நான் யார் என்பதைக் காட்டுவேன்; அதிமுக ஒரே அணியாக போட்டி - சசிகலா!

அதிமுக வேட்பாளர் 

இதில் காங்கிரஸ் 7 முறையும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தொகுதியை விட்டுக்கொடுத்த அ.தி.மு.க, தற்போது தனித்து களம் காண்கிறது.

விளவங்கோடு இடைத்தேர்தல்: அதிமுக களமிறக்கும் ராணி; பாஜக சார்பில் போட்டியிடுவாரா விஜயதாரணி? | Admk Announces Candidate Vilavancode By Election

அதற்காக விளவங்கோடு தொகுதிக்கு ராணி என்பவரை வேட்பாளராக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்நிலையில் 3 முறை கை சின்னத்தில் வென்ற விஜயதாரணி, இந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெறுவாரா..? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தொகுதியைச் சேர்ந்த பலரும், அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவாரா..? என்பது சந்தேகம் என்கின்றனர்.