அண்ணாமலை வெற்றி பெற வேண்டும்; பிரச்சாரத்தில் கைவிரலை வெட்டிய பாஜக பிரமுகர்!

BJP K. Annamalai
By Swetha Apr 18, 2024 04:32 AM GMT
Report

பா.ஜ.க. பிரமுகர் துரை ராமலிங்கம் கோவையில் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று தான் கைவிரலை வெட்டி கொண்டார்.

அண்ணாமலை வெற்றி 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள ஆண்டாள் முள்ளிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் துரை ராமலிங்கம்(55). இவர் அம்மாவட்டத்தின் பாஜக துணைத்தலைவர் ஆவார். நடப்பாண்டின் மக்களவை தேர்தலில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

அண்ணாமலை வெற்றி பெற வேண்டும்; பிரச்சாரத்தில் கைவிரலை வெட்டிய பாஜக பிரமுகர்! | Bjp Celebrity Cut Off Finger To Win Annamalai

எனவே அவரை ஆதரித்து வாக்கு சேகரிக்க துரை ராமலிங்கம், வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் பிரசாரம் செய்தார். இந்நிலையில், நேற்று மாலை பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தின் போது அவர், கோவை தொகுதியில் அண்ணாமலை தான் வெற்றி பெற வேண்டும் என்று கூறியவாறு கத்தியை எடுத்து இடது கை ஆள்காட்டி விரலை திடீரென துண்டித்து கொண்டார்.

பெரியார் சிலையை ஒருபோதும் அகற்ற முடியாது..!! அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி!!

பெரியார் சிலையை ஒருபோதும் அகற்ற முடியாது..!! அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி!!

விரலை வெட்டிய  பிரமுகர்

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இந்த சம்பவம் குறித்து பேசிய துரை ராமலிங்கம், நான் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக பா.ஜ.க. கட்சியில் உள்ளேன்.

அண்ணாமலை வெற்றி பெற வேண்டும்; பிரச்சாரத்தில் கைவிரலை வெட்டிய பாஜக பிரமுகர்! | Bjp Celebrity Cut Off Finger To Win Annamalai

10 நாட்களுக்கு முன்பு கோவை வந்து அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தேன். அருகில் இருந்தவர்கள் அவர் தோல்வியை சந்திப்பார் என்று கூறினர். இது எனக்கு வேதனையை கொடுத்தது. எனவே அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது விரலை வெட்டிக் கொண்டேன் என்று கூறினார்..