மோடி இல்லாமல் 150 இடங்களில் கூட வெல்ல முடியாது - விவாதமாகும் எம்.பி. நிஷிகாந்த் துபேவின் பேச்சு!
மோடி இல்லாவிட்டால் பாஜக 150 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது என நிஷிகாந்த் துபே கூறியுள்ளார்.
நிஷிகாந்த் துபே
மஹாராஷ்டிரா, நாக்பூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், 75 வயதானால் தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என பேசியது சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், மோகன் பகவத்தின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக ஜார்கண்ட் மாநில பாஜக எம்பி நிஷிகாந்த் துபே அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
மோடிதான் முக்கியம்
பாஜக என்றால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மோடிதான் தெரிகிறார். 2029 தேர்தலைக்கூட மோடி தலைமையில்தான் சந்திப்போம். மோடி இல்லாவிட்டால் பாஜக 150 இடங்களில்கூட வெற்றி பெறாது.
இன்றைய நிலையில் பாஜகவுக்குத்தான் மோடி தேவை. மோடிக்கு பாஜக தேவை அல்ல. தேர்தல் பொதுக்கூட்டங்களில் மக்கள் வாக்கு மோடிக்கு செல்லும் என்று கூறிதான் பரப்புரை செய்யப்பட்டது.
எனவே, 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற விதிமுறை மோடிக்கு பொருந்தாது என கூறியுள்ளார்.