நிராகரிப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் மனு - 8 பேர் வாபஸ் - வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்

Amit Shah Narendra Modi Gujarat Lok Sabha Election 2024
By Karthick Apr 22, 2024 10:39 AM GMT
Report

குஜராத் மாநிலத்தில் சூரத் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல்

நாட்டின் மக்களவை தேர்தல் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. முதற்கட்ட தேர்தல் 102 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட தேர்தல் வருண் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

bjp-candidate-wins-unopposed-in-gujarat-surat

இந்தியா கூட்டணி - ஆளும் பாஜகவின் NDA கூட்டணிக்கு மத்தியில் தான் மிக பெரிய போட்டி நிலவுகிறது. தேர்தல் வரும் ஜூன் 4-ஆம் முடிவுகள் வெளியாகி உள்ளது. ஆனால், இன்றே குஜராத் மாநிலத்தில் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

bjp-candidate-wins-unopposed-in-gujarat-surat

குஜராத் மாநிலத்தின் சூரத் மக்களவை தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் முகேஷ் தலால் என்பவரும், காங்கிரஸ் - ஆம் ஆத்மீ கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிலேஷ் கும்பனி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

போட்டியின்றி தேர்வு

அதே போல, சுயேட்சையாக பாரத்பாய் பிரஜாப்தி, அஜித் சிங் பூபத்சிங் உமாத், கிஷோர்பாய் தயானி, பரையா ரமேஷ்பாய் பர்சோத்தம்பாய் போன்றவர்களும் லோக் கட்சி சார்பில் சோஹைல் ஷேக், உலகளாவிய குடியரசுக் கட்சி சார்பில் ஜெயேஷ்பாஹி மேவாடா, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பியாரேலால் பாரதி, சர்தார் வல்லபாய் படேல் கட்சி சார்பில் அப்துல் ஹமீத் கான் என மொத்தமாக 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

bjp-candidate-wins-unopposed-in-gujarat-surat

இதில், காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவில் அவரது விண்ணப்பதாரர்கள் கையெழுத்திடவில்லை என்று கூறியதையடுத்து அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

"ஆப் கி பார் 400 பார்" - இலக்கை எட்டுமா மோடி தலைமையிலான பாஜக?

"ஆப் கி பார் 400 பார்" - இலக்கை எட்டுமா மோடி தலைமையிலான பாஜக?

நிலேஷ் கும்பானியின் மூன்று முன்மொழிபவர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அளிக்கப்பட்ட வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை என்று பிரமாணப் பத்திரத்தில் கூறியதை அடுத்து அவரின் மனுதாக்கல் நிராகரிக்கப்பட்டுள்ளது.

bjp-candidate-wins-unopposed-in-gujarat-surat

அதே போல மற்ற வேட்பாளர்களும் வாபஸ் பெற்ற நிலையில், பாஜகவின் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வானதாக மாவட்ட தேர்தல் அதிகாரி சௌரப் பார்தி அறிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பாபு மங்குகியா, இந்த முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.