1400 கோடிக்கு சொத்து - 10 கோடியில் லண்டனில் வீடு - அதிரவைத்த பாஜக வேட்பாளர்

BJP Lok Sabha Election 2024
By Karthick Apr 17, 2024 11:14 AM GMT
Report

1400 கோடி ரூபாய் மதிப்பு சொத்து மதிப்பு வைத்திருக்கும் இந்த பாஜகவின் வேட்பாளரை குறித்து தெரியுமா.?

பல்லவி டெம்போ

நாடாளுமன்ற தேர்தலில், போட்டியிடும் பல வேட்பாளர்களின் சொத்து பட்டியல் குறித்த தகவல் வெளியாகி, மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து வருகின்றது. அப்படி பாஜகவின் வேட்பாளர் ஒருவரின் சொத்து பட்டியல் வெளியாகி தற்போது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

bjp-candidate-who-has-1400-crore-net-worth-house

கோவா மாநிலத்தின் தெற்கு கோவா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பல்லவி டெம்போ. நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்த அவரின் தனது சொத்து மதிப்பையும் தாக்கல் செய்துள்ளார். அதன் படி, தனது சொத்து மதிப்பு குறித்த 119 பக்க பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

10 கோடி ரூபாய் வீடு

மேலும், தனது கணவர் ஸ்ரீனிவாஸ் சொத்து மதிப்பு ரூ.1400 கோடி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தனது பெயரில் 255.44 கோடி ரூபாயும், கணவர் ஸ்ரீனிவாஸிடம் 998.83 கோடி ரூபாய் சொத்தும் இருப்பதாக குறிப்பிடுள்ளார்.

மக்களவைத் தேர்தல்(2024): 11- 20 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? ஐபிசியின் மெகா கருத்து கணிப்பு!

மக்களவைத் தேர்தல்(2024): 11- 20 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? ஐபிசியின் மெகா கருத்து கணிப்பு!


ரியல் எஸ்டேட் பிசினஸ்'சில் துவங்கி கால்பந்து கப்பல் கட்டுதல், கல்வி, சுரங்கம் வரையிலான பல தொழில்களை சிறப்பாக நடத்தி வரும் டெம்போ குழுமத்தின் தலைவரான ஸ்ரீனிவாஸ் டெம்போவை மணந்து கொண்டார் பல்லவி டெம்போ.

bjp-candidate-who-has-1400-crore-net-worth-house

49 வயதாகும் அவர், புனே பல்கலைக்கழக MIT'யில் வணிக பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவராவார். இந்த தம்பதிக்கு துபாயில் 2.5 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு ஆடம்பர குடியிருப்பும், லண்டனில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான குடியிருப்பை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.