வெளியான ஆபாச வீடியோ - தேர்தலில் இருந்து பின்வாங்கிய உ.பி பாஜக எம்.பி..!
பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இருந்து மேலும் ஒருவர் பின்வாங்கி இருக்கின்றார்.
ஆபாச வீடியோ
பாஜகவை சேர்ந்த உத்திரபிரதேச எம்.பி உபேந்திர சிங் ராவத். இவர் உத்தரபிரதேசத்தின் பாராபங்கி தொகுதி பாஜக எம்பி-யாக இருக்கின்றார்.
அண்மையில் வெளியிடப்பட்ட பாஜகவின் முதற்கட்ட வேட்பாளரர்கள் பட்டியலில் இவருக்கு மீண்டும் அதே பாராபங்கி தொகுதியில் பாஜக தலைமை வாய்ப்பு வழங்கியது. உத்திரபிரதேசத்தில் பாஜகவின் கை ஓங்கியிருக்கும் காரணத்தால் இவர் வேட்பாளர் என்ற கொண்டாட்டம் கொஞ்ச நாள் கூட நீடிக்கவில்லை.
போட்டியில்லை
அதற்குள்ளாகவே இவரின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி பெரும் வைரலானது.இது உண்மையானதா..? அல்லது சித்தரிக்கப்பட்டதா..? என்பது இன்னும் தெரியாத நிலையில், இந்த வீடியோவின் விளைவாக இவர் தேர்தலில் இருந்து பின்வாங்கி இருக்கின்றார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், என்னுடைய எடிட் செய்யப்பட்ட வீடியோ டீப்ஃபேக் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு வைரலாகி வருகிறது, அதற்காக நான் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளேன்,
मेरा एक एडिटेड वीडियो वायरल किया जा रहा है जो DeepFake AI तकनीक द्वारा जेनरेटेड है, जिसकी FIR मैंने दर्ज करा दी है,इसके संदर्भ में मैंने मा॰ राष्ट्रीय अध्यक्ष जी से निवेदन किया है कि इसकी जाँच करवायी जाये। जबतक मैं निर्दोष साबित नहीं होता सार्वजनिक जीवन में कोई चुनाव नहीं लड़ूँगा
— Upendra Singh Rawat (@upendrasinghMP) March 4, 2024
இது தொடர்பாக, மாண்புமிகு தேசியத் தலைவரிடம் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். நான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்படும் வரை பொது வாழ்வில் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.