நடுரோட்டில் துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி..!

Attempted Murder Salem
By Vinothini May 16, 2023 09:26 AM GMT
Report

சேலத்தில் பாஜக நிர்வாகி ஒருவரை நடுரோட்டில் துரத்தி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளது.

பாஜக நிர்வாகி

சேலம் மாவட்டம், அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உதயசங்கர். இவர் வெள்ளிப் பட்டறையில் வேலை செய்து வந்தார்.

bjp-cadre-killed-in-salem-police-investigating

மேலும் பா.ஜ.க-வின் மாநகர இளைஞரணிச் செயலாளராகவும் இருந்து வந்தார். இவர், நேற்று மாலை பள்ளப்பட்டி மூன்று ரோடு பகுதியிலுள்ள விவசாய விற்பனை கூட்டுறவு வங்கி அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், இரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாளை வைத்து இவரை வெட்ட தொடங்கினர்.

கொடூர கொலை

இந்நிலையில், அவர் அங்கு இருந்த பேக்கரி கடைக்குள் வெட்டுக் காயங்களுடன் ஓடினார்.

ஆனாலும் அவரைப் பின் தொடர்ந்து வந்து, அவரை தரதரவென நடுரோட்டுக்கு இழுத்து சரமாரியாக வெட்டினர்.

bjp-cadre-killed-in-salem-police-investigating

இதில் அவரின் தலை, வயிறு, கை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. அதையடுத்து, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த உதயசங்கரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது, அனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும் தகவலறிந்து மாநகர துணை காவல் ஆணையர் கௌதம் கோயல், உதவி ஆணையாளர் நிலவழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வுசெய்ததில், மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் இவரை வெட்டிவிட்டுத் தப்பி ஓடியது தெரியவந்தது.

இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.