இபிஎஸ் உருவப்படம் எரித்த பாஜக நிர்வாகி.. இரவில் நீக்கம் , காலையில் மீண்டும் சேர்ப்பு : பதட்டத்தில் தமிழக பாஜக ?
எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்த தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி பாஜக தலைவர் தினேஷ் ரோடி நீக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் மீண்டும் பாஜக கட்சியில் இணைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக அதிமுக மோதல்
கடந்த சில நாட்களாக அதிமுக பாஜக இடையே பனிபோர் நிலவி வருகின்றதது என்றே கூறலாம், பாஜகவிலிருந்து விலகிய முக்கிய நபர்கள் இருவரையும் அதிமுகவில் இணைத்தமைக்கு பாஜக தொண்டர்கள் பலர் தங்களது கண்டணங்களை தெரிவித்தனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பாஜகவை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரே இரவில் இணைப்பு
இதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இபிஎஸ் உருவப்படத்தை பாஜகவை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட தலைவர் வெங்கடேசன், சென்னகேசவன் அவர்கள் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து தினேஷ் ரோடியை ஆறு மாத காலம் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்ற அறிவித்த அறிவிப்பானது உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் இளைஞரணி தலைவர் பொறுப்பில் தினேஷ் ரோடி தொடர்ந்து செயல்படுவார் என்று மாநில பொதுச்செயலாளர் பாலகணபதி அறிவித்துள்ளார்.
நேற்று 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவே கட்சியில் இணைக்கப்பட்டது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜேபி நட்டா தமிழக பாஜகவுக்கு அறிவுரை கூறி இருந்தார் அதில் அதிமுகவினை தமிழக பாஜக விமர்ச்சிக்க கூடாது என அறிவுரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது