ஈரோடு கிழக்கு இடைதேர்தல்; முடிவை அறிவித்த பாஜக - சீமானுக்கு அடித்த அதிர்ஷ்டம்
ஈரோடு கிழக்கு இடைதேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்,கடந்த மாதம் காலமான நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வி.சி.சந்திரகுமார்
இந்நிலையில் திமுக சார்பில் அந்த கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், ஈரோடு கிழக்குத் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அறிவித்திருந்தது. இதனையடுத்து அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறியது.
பாஜக புறக்கணிப்பு
இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் இடைத்தேர்தலை புறக்கனிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது, ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில், திமுக, தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம்.
பத்திரிகைச் செய்தி
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) January 12, 2025
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் அறிவிப்பு
தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு,… pic.twitter.com/jlBngQ7Kx2
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு. மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர்
அதிமுக, பாஜக கூட்டணிகள் தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ள நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கிடையேயான நேரடி போட்டியாக மாறியுள்ளது.
அதிமுக, பாஜக, தவெக என அனைத்து கட்சி ஆதரவாளர்களும் திமுக எதிர்ப்பு மனநிலையில் உள்ளதால் இவர்களின் வாக்கு பெரும்பாலும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கே செல்ல வாய்ப்புள்ளது. பொங்கல் தினத்தன்று வேட்பாளரை அறிவிக்க உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டு வாக்கு வங்கியை அதிகரித்து, மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி இந்த இடைத்தேர்தலில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.