பாஜக அலுவலகம் முற்றுகை; வருவோருக்கு உணவும், பரிசும் - அண்ணாமலை அறிவிப்பு!

Tamil nadu BJP K. Annamalai
By Jiyath May 23, 2024 02:29 AM GMT
Report

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். 

அண்ணாமலை 

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் தமிழர்கள் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜக அலுவலகம் முற்றுகை; வருவோருக்கு உணவும், பரிசும் - அண்ணாமலை அறிவிப்பு! | Bjp Annamalai Reply To Congress Selvaperunthagai

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்.

பிரதமர் மோடி தான் அரசன்; நான் உங்களது மகன் மற்றும் சகோதரன் - ராகுல் காந்தி!

பிரதமர் மோடி தான் அரசன்; நான் உங்களது மகன் மற்றும் சகோதரன் - ராகுல் காந்தி!

புத்தகமும் பரிசு 

மேலும், வரும் அனைவருக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். எப்படி திமுகவும் காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம்.

பாஜக அலுவலகம் முற்றுகை; வருவோருக்கு உணவும், பரிசும் - அண்ணாமலை அறிவிப்பு! | Bjp Annamalai Reply To Congress Selvaperunthagai

எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அவர்கள், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.