சர்வதேச அரசியல் பயில சென்ற அண்ணாமலை - ஸ்காட்லாந்து சிகரத்தில் செய்த செயல்!
ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சாதனை படைத்துள்ளார்.
அண்ணாமலை
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்காகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி விமானம்மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்றார். 4 மாதங்கள் தங்கியிருந்து படிப்பை மேற்கொள்ளும் அண்ணாமலை, அங்கிருந்தபடியே கட்சி நிகழ்வுகளைக் கவனித்துக் கொள்வார்.
படிப்பை முடித்துவிட்டு டிசம்பர் இறுதிக்குள் சென்னை திரும்ப உள்ளார். இந்த நிலையில் ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சாதனை படைத்துள்ளார்.இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில் ,1,345 மீட்டர் உயரத்தில், ஸ்காட்லாந்தில் உள்ள பென் நெவிஸ் ஐக்கிய இராச்சியத்தின் மிக உயரமான சிகரமாகும். இந்த சிகரத்தில் ஏற ஒரு வாய்ப்பு கிடைத்தது. சவாலை ஏற்றுக்கொண்டு உச்சியை அடைந்தேன்.
சாதனை
இந்தச் சாதனையை நமது பிரதமருக்கு அர்ப்பணிக்கிறேன் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையான "மிஷன் லைஃப்", ஒரு நிலையான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதையும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு பிரச்சாரம்.
இந்த பயணம் முழுவதும் ஒரு குப்பைத் தொட்டி இல்லாமல் கூட பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத தூய்மையைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. இது பிரதமரின் ஸ்வச் பாரத் மிஷன் கிடைத்த வெற்றியாகும்.
மேலும் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நீடித்த நட்பின் அடையாளமாக பென் நெவிஸ் சிகரத்தில் நமது மூவர்ண கொடியை உயர்த்தியதில் நான் பெருமைப்படுகிறேன்.என்று இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.