திடீர் கைது.. உயிருக்கு பாதுகாப்பு இல்லை - அதிர்ச்சியில் அண்ணாமலை போட்ட ட்வீட்!

M K Stalin DMK BJP K. Annamalai
By Vidhya Senthil Aug 04, 2024 10:45 AM GMT
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கபிலன் கைது 

சென்னையில் கடந்த ஜூலை 1ம் தேதி பெரவள்ளூரில் நடந்த பாஜக கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து கபிலன் அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது . இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் இன்று கபிலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திடீர் கைது.. உயிருக்கு பாதுகாப்பு இல்லை - அதிர்ச்சியில் அண்ணாமலை போட்ட ட்வீட்! | Annamalai Condemns Tn Govt To Kaplan Was Arrested

இந்த நிலையில் வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,''' வடசென்னை மேற்கு தமிழக பாஜக மாவட்டத் தலைவர் திரு. கபிலன் அவர்களைத் தமிழகக் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

மத்திய அமைச்சரவைக்கு போகும் அண்ணாமலை - தலைமையும் மாற்றம்!! அதிரடி நகர்வில் பாஜக?

மத்திய அமைச்சரவைக்கு போகும் அண்ணாமலை - தலைமையும் மாற்றம்!! அதிரடி நகர்வில் பாஜக?

அடக்குமுறை

பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்காக அவரைக் கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. திமுக அரசின் இந்த பாசிசப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, தினம் கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கையில், திமுக தனது அரசியலுக்குக் காவல்துறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க இயலாத முதலமைச்சர், பாஜகவினரை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறார். இது போன்ற அடக்குமுறைகளால், திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியையோ, முதலமைச்சர் ஸ்டாலினின் கையாலாகாத்தனத்தையோ மறைக்க முடியாது.

பாஜகவினர் மீதான இதுபோன்ற அடக்குமுறைகளைக் கைவிட்டு, மாநில அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கைக் கவனியுங்கள் முதலமைச்சரே. சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது உங்கள் நிர்வாகம் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.