போதைப் பொருள் விற்பனையில் கிடைத்த பணம்.. வெள்ளையாக்குவதற்கு திமுக செயல் அம்பலம் -அண்ணாமலை!

DMK K. Annamalai Anbil Mahesh Poyyamozhi
By Vidhya Senthil Dec 16, 2024 11:51 AM GMT
Report

ஜாபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை கோயலென்ஸ் வெஞ்ச்சர் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது, அமலாக்கத் துறை விசாரணையில் வெளிவந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

போதைப் பொருள் 

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

k annamalai

ஜாபர் சாதிக்கின் நிறுவனமான ‘கோயலென்ஸ் வெஞ்ச்சர்’ (Coalescence Ventures) என்ற நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததாரர் நிறுவனமான ‘ஸ்ரீ அப்பு டைரக்ட்’ (Sri Appu Direct) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பொருட்களை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

குடிநீரில் கழிவுநீர் .. பறிபோன 3 உயிர்களுக்கு அமைச்சர் பதில் என்ன? அண்ணாமலை சரமாரி கேள்வி!

குடிநீரில் கழிவுநீர் .. பறிபோன 3 உயிர்களுக்கு அமைச்சர் பதில் என்ன? அண்ணாமலை சரமாரி கேள்வி!

ஜாபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, 2022 -2023 காலகட்டத்தில், தனது ‘கோயலென்ஸ் வெஞ்ச்சர்’ நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது, அமலாக்கத் துறை விசாரணையில் வெளிவந்துள்ளது.

அமலாக்கத் துறை

இதே காலகட்டத்தில்தான், ‘ஸ்ரீ அப்பு டைரக்ட்’ நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துடன் ஒப்பந்தம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.இந்த ஒப்பந்தத்துக்கான பொருட்களை வழங்கியது, ஜாபர் சாதிக்கின் ‘கோயலென்ஸ் வெஞ்ச்சர்’ நிறுவனம் ஆகும்.

போதைப் பொருள் விற்பனையில் கிடைத்த பணம்

குறிப்பிட்ட காலகட்டத்தில், திமுக நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, வெள்ளையாக்குவதற்கு,தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவே இதன் மூலம் தெரிய வருகிறது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இது குறித்து விளக்கமளிக்க வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.