பூரண மது விலக்கு சாத்தியமில்லை; கள்ளுக்கடை திறக்க வேண்டும் - அண்ணாமலை!
கள்ளுக்கடை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "அமைச்சர் துரைமுருகன் சொன்னதை காமெடியாக சொன்னாலும்.. நான் கள்ளக்குறிச்சிக்கு போகும்போது எங்களிடம் சிலர் சொன்னார்கள்.. உண்மையில் கள்ளக்குறிச்சியிலும் சொன்னார்கள்.
இன்று டாஸ்மாக்கின் தரம் தண்ணீரை போன்று விற்கிறார்கள் என்று கூறினார்கள். அதில் தரம் இல்லை யாரும் சென்று ஆய்வு நடத்துவது இல்லை. போதை அதிகமாக வேண்டும் என்பதற்காக தான் கள்ளச்சாராயம் அபின் மற்றும் கஞ்சாவை நோக்கி சென்று இருக்கிறார்கள் என்று கள்ளக்குறிச்சியில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.
கள்ளுக்கடை
துரைமுருகன் நகைச்சுவையாக சொல்லியிருந்தாலும் அது உண்மை. டாஸ்மாக் மதுபானம் தரமானதாக இல்லை, `கிக் இல்லை' என அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான். சிஸ்டத்தில் பிரச்சனை இருக்கிறது என்பதை அவரை ஒப்புக் கொண்டுள்ளார்.
அரசு தவறாக வேலை செய்கிறது என்று நகைச்சுவையாக அவர் சொன்னார் என்கிறார்கள். ஆனால் இதை நகைச்சுவையாக கடந்து செல்லக் கூடாது. தமிழகத்தில் பூரண மது விலக்கு சாத்தியம் இல்லை, கள்ளுக்கடை திறக்க அனுமதி வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.