தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளது - மக்களவையில் பிரதமர் மோடி பெருமிதம்!
தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
நாடாளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்துப் பேசி வருகிறார். அவர் பேசியதாவது "அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்குமான வளர்ச்சி என்பதே எங்களின் தாரக மந்திரம்.
இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. வாக்கு வங்கி அரசியல் நாட்டை பிளவுபடுத்தும். தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளதை மக்களவை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
நாங்கள் தயார்
தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. வளர்ச்சி அடைந்த தேசமாக இந்தியா மாறுவதை பார்க்க மக்கள் காத்திருந்தார்கள். 2047-ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாற 24 மணி நேரமும் பணியாற்ற நாங்கள் தயார்.
அதனை மனதில் வைத்து திட்டங்களை தீட்டி வருகிறோம். நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்திய ராகுல் காந்தி நட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.