பெரியாருக்கும் இந்த தமிழ்நாட்டிற்கும் தொடர்பே கிடையாது - அண்ணாமலை பரபர பேட்டி!

Periyar E. V. Ramasamy Tamil nadu DMK K. Annamalai
By Sumathi Jan 12, 2025 09:30 PM GMT
Report

பெரியாருக்கும் நிகழ்கால தமிழ்நாட்டிற்கும் தொடர்பு இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பெரியார் விவகாரம்

கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெரியாருக்கும் நிகழ்கால தமிழ்நாட்டிற்கும் தொடர்பு இல்லை.

annamalai - periyar

எப்போதோ கட்டமைத்த பிம்பத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள். கவர்னர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். அவர் சொன்னது சரியே. கவர்னர் அந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

தமிழகத்திலேயே அதிக வயது; 40 வருஷமா ஓடியாடிய காந்திமதி - என்ன நடந்தது?

தமிழகத்திலேயே அதிக வயது; 40 வருஷமா ஓடியாடிய காந்திமதி - என்ன நடந்தது?

அண்ணாமலை கருத்து

எங்கேயும் தேர்தலை புறக்கணிக்காத பாஜக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை தேர்தலை புறக்கணிப்பது என்பது மிகமிக அபூர்வம். மக்களை அடைத்து வைக்கப்படக் கூடாது என்பதற்காக தேர்தலை புறக்கணித்துள்ளோம்.

பெரியாருக்கும் இந்த தமிழ்நாட்டிற்கும் தொடர்பே கிடையாது - அண்ணாமலை பரபர பேட்டி! | Bjp Annamalai About Periyar Tamilnadu

தவறு செய்பவர்களுக்கு தேர்தலில் மக்கள் மனசாட்சிபடி தண்டனை அளிப்பார்கள் என நம்புகிறோம். தேர்தலில் நின்றால்தான் ஜனநாயக கட்சி முழுமை பெறும் என்பதை நாங்கள் நம்பவில்லை.

இந்த தேர்தல் முதலும், கடைசியுமாக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் தேர்தலாக இருக்க வேண்டும் என கருதுகிறோம். நாம் தமிழர் கட்சி மட்டும் போட்டியிடுவது ஒன்னும் தைரியம் அல்ல. ஈரோடு இடைத்தேர்தல் கானல் நீரை போல நடக்கக்கூடிய தேர்தல். கானல் நீரால் என்ன பயன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.