ரேஸ் வைப்பது சுலபமான விஷயம் அல்ல..உதயநிதிக்கு HATS OFF - புகழ்ந்து தள்ளிய பாஜக நிர்வாகி!
சென்னை ஃபார்முலா 4 ரேஸ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாஜக நிர்வாகியும், பைக் ரேஸருமான அலிஷா அப்துல்லா பாராட்டியுள்ளார்.
ஃபார்முலா 4 ரேஸ்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் ஆகஸ்ட் 31 முதல் செப் 1 வரை ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டி நடைபெற்றது . இந்த கார் பந்தயத்திற்காகத் தீவுத் திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்டு ரோடு வரை 3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட் (சாலை) அமைக்கப்பட்டது.
ஃபார்முலா 4 வாகனம் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த கார் பந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்பீடு, ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்டெஸ்டர் உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்தப் போட்டியின் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டனர். இதற்காகச் சினிமா பிரபலங்கள் உள்படப் பல தரப்பினரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் உதயநிதி
இந்நிலையில் சென்னை ஃபார்முலா 4 ரேஸ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாஜக நிர்வாகியும், பைக் ரேஸருமான அலிஷா அப்துல்லா பாராட்டியுள்ளார். இது குறித்து சென்னையில் இப்போது ஃபார்முலா 4 ரேஸ் முக்கியமா என நிறையப் பேர் கேட்கின்றனர். ஒரு வீராங்கனையாகப் பார்த்தால் இது முக்கியம் தான்.
The man behind the street car racing which took place . Hats off to akhilesh reddy & his team for their hard work which made this event a grand success ! This is definitely history for Tamil Nadu!
— Dr. Alisha Abdullah (@alishaabdullah) September 2, 2024
Politics aside! The TN government did a fantastic job with this event! ?… pic.twitter.com/Sa951dcRWF
தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர்
உதயநிதி ஸ்டாலினை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
அவர் நன்றாக உதவி செய்கிறார் என்பதை மறுக்க முடியாது.சென்னையின் மையப்பகுதியில் ரேஸ் வைப்பது என்பது சுலபமான விஷயம் அல்ல. அனைத்து பிரச்சினைகளையும் கடந்து அவர் இதைச் செய்துள்ளார். அவருக்கு HATS OFF" என்று தெரிவித்துள்ளார்.