சென்னை பார்முலா 4 கார் பந்தயம் - தமிழ்நாட்டுக்கு என்ன பயன்?

Udhayanidhi Stalin Tamil nadu Chennai
By Karthikraja Aug 31, 2024 07:30 PM GMT
Report

சென்னை பார்முலா 4 கார் பந்தயம் மூலம் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை காணலாம்.

சென்னை பார்முலா 4 கார் பந்தயம்

இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் பார்முலா 4 பந்தய நிகழ்வான 'சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்துகிறது. 

chennai formula 4 car race

இந்த போட்டி 3.7 கி.மீ. தொலைவு கொண்ட பார்முலா 4 கார் பந்தய சா்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம் , சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றின் வழியே மீண்டும் தீவுத்திடலில் நிறைவடைகிறது. 

ஃபார்முலா 4 கார் பந்தயப் பாதையில் மது விளம்பரங்களா? அன்புமணி ஆவேசம்

ஃபார்முலா 4 கார் பந்தயப் பாதையில் மது விளம்பரங்களா? அன்புமணி ஆவேசம்

உதயநிதி ஸ்டாலின்

இதற்காக கார் பந்தயம் நடைபெறும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கார் பந்தயத்தை நேரில் கண்டு களிக்க உள்ளனர்.இந்த போட்டியை தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த போட்டியின் முதல் நாள் நிகழ்வுகள் இன்று(31.08.2024) இரவு 7 மணிக்கு தொடங்கி இரவு 10:30 மணி வரை நடைபெற உள்ளது. நாளை மீண்டும் நடைபெற உள்ளது. 

இதற்கு முன்னர் சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மட்டுமே நடைபெற்ற இரவு நேர சாலை முதல்முறையாக இந்தியாவில் சென்னையில்தான் இந்த போட்டிகள் நடக்கிறது. இந்த கார் பந்தயம் நடத்துவது தொடர்பாக இதை நடத்துவதால் என்ன பயன், ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

பலன்கள்

இந்த போட்டி நடத்துவதன் பின்னணியில் உள்ள பலன்களை காணலாம். ஃபார்முலா 4 கார் ரேஸ் விளையாட்டை நடத்துவதன் மூலம் மோட்டார் வாகன விளையாட்டுகளில் தமிழ்நாடு இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்க வாய்ப்புள்ளது. இந்திய கார் ரேஸ் ஓட்டுநர்கள் சர்வதேச அளவில் ஜொலிக்க பாதை அமைத்துக் கொடுக்கும். மேலும் கார் ரேஸ்களின் மையமாக தமிழ்நாடு திகழ இந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் வழி வகுக்கும். 

கடந்த ஆண்டு ஏஸ் நெக்ஸ்ட் ஜென் நிறுவனத்துடன் தெலுங்கானா அரசு இணைந்து க்ரீன்கோ ஹைதராபாத் இ-ப்ரிக்ஸ் பந்தயத்தை நடத்தியது. இந்த கார் பந்தயம் ஹைதராபாத்துக்கு கிட்டத்தட்ட 84 மில்லியன் டாலர் பொருளாதார தாக்கத்தை வழங்கியது. மோட்டார் வாகன விளையாட்டுகளில் சென்னை ஆதிக்கம் செலுத்தும் போது சென்னை பெரிய அளவில் பொருளாதார ரீதியாக பலன் அடைய வாய்ப்புள்ளது.

மோட்டார் ஸ்போர்ட் கலாச்சாரம்

இந்த பந்தயங்கள் மூலம் மோட்டார் ஸ்போர்ட் கலாச்சாரம் உருவாகுவதோடு, அடுத்த தலைமுறை பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை உருவாக்க முடியும். ஃபார்முலா 4 கார் பந்தயம் ரசிகர்கள், அணிகள், ஸ்பான்சர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் உட்பட பலதரப்பட்ட சர்வதேச பார்வையாளர்களை தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்கின்றன.

சர்வதேச அளவில் சென்னை கவனம் பெறுவதோடு, உலகளாவிய நிகழ்வுகள், வணிக முதலீடுகள் மற்றும் கூட்டு வாய்ப்புகள் சென்னையை நோக்கி வர வாய்ப்புள்ளது.