interview சென்ற கணவர் .. அடுத்த நொடியே நடந்த நடக்க கூடாத சம்பவம் - கதறிய மனைவி!
வேலை கிடைக்காத விரக்தியில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்
சேலம் மாவட்டம் மல்லூர் புது வீதியில் வசித்து வருபவர்கள் ஹரிகிருஷ்ணன் - நவ்யா தம்பதியினர். இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளார். பி.இ. பொறியியல் பட்டதாரியான ஹரிகிருஷ்ணன் கடந்த இரண்டரை மாதங்களாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை உள்ள சிப்காட் தொழில் சாலையில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன் பெரிய நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்து, நேர்காணலுக்குச் சென்றுள்ளார். அப்போது ஹரிகிருஷ்ணனிடம் போதுமான அளவு முன் அனுபவம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால், வேலை கிடைக்காத விரக்தியில் ஹரிகிருஷ்ணன் மன உளைச்சலிலிருந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 4-ம் தேதி ஹரிகிருஷ்ணன் மனைவி மற்றும் குழந்தையைத் தனது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகு ஹரிகிருஷ்ணனுக்கு அவரது மனைவி போன் செய்த போது எடுக்கவில்லை .
தற்கொலை
இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ஹரிகிருஷ்ணன் மனைவியிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது தந்தை ஹரிகிருஷ்ணன் தங்கியிருந்த வீட்டை உடைத்துப் பார்த்த போது குழந்தையின் தொட்டில் துணியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ஹரிகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.