மன்சூர் தப்புனா ரஜினியும் தப்புதான்; கொந்தளித்த பிரபலம் - அப்படி என்ன சொன்னார்?
ரஜினி பேசியதை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை என பிஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார்.
மன்சூர் சர்ச்சை
நடிகை த்ரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியதையடுத்து கண்டனங்கள் எழுந்து வருகிறது. சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய சினிமா விமர்சகர் பிஸ்மி, “ ஜெயிலர், பட விழாவில் கிட்டத்தட்ட மன்சூர் அலிகான் பேசிய சாயலில் ரஜினிகாந்த்தும் பேசி இருந்தார். தமன்னாவை பற்றி அவர் பேசியதை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை.
பிஸ்மி காட்டம்
தமன்னா ஜெய்லர் படத்தில் நடிக்கிறாங்க அதனால நான் ஆர்வமா வந்தேன். ஆனா கடைசியில என்ன அவங்க கூட ஆடவே விடல என்ன ரஜினிகாந்த் பேசியது இசை செயலின் வெளிப்பாடு.
அது ரஜினிகாந்த் ஆக இருந்தால் என்ன மன்சூர் அலிகான் ஆக இருந்தால் என்ன உங்க மனசுக்குள்ள இந்த மாதிரி பெண்கள் குறித்து கேவலமான எண்ணம் இருக்கிறது என வெளிப்படுத்தும் குணம் தான் அது. அதனால் இது போன்ற பேச்சுகளை யாரும் எந்த காலத்திலும் பேசக்கூடாது " எனத் தெரிவித்துள்ளார்.