ரஜினிக்கு அந்த நடிகை மேல் இச்சை.. கேவலமான எண்ணம் இருக்கு - பிரபலம் பகீர் தகவல்!

Vinothini
in பிரபலங்கள்Report this article
பிரபலம் ஒருவர் நடிகர் ரஜினி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
மன்சூர் ஆபாச பேச்சு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகர் த்ரிஷா. இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார், படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில், விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசினார். அவர் பேசியதற்கு பல நடிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில், "மன்சூர் அலிகான் எல்லாம் மனித குலத்துக்கே இழுக்கு" என்று காட்டமாக பதிலளித்தார்.
பிரபலம் தகவல்
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில், “தமன்னாவுடன் நடனம் ஆடலாம் என்று ஆசையாக வந்தேன். ஆனால் அவருடன் எனக்கு காம்பினேஷனே இல்லை" என்று கூறினார். இது குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி பேசியுள்ளார். அதில், "ஜெயிலர் விழாவில் ரஜினிகாந்த்தும் தமன்னாவிடம் கிட்டத்தட்ட மன்சூர் அலிகான் பாணியில்தான் பேசினார்.
அதுகுறித்து ஏன் பெரிதாக யாரும் குரல் எழுப்பவில்லை. அந்த விழாவில் தமன்னா குறித்து பேசியது ரஜினிகாந்த் இச்சையை வெளிப்படுத்தும் வார்த்தைதானே. அது ரஜினியாக இருந்தால் என்ன மன்சூர் அலிகானாக இருந்தால் என்ன.
ஒரு பெண் குறித்து அதுவும் ஒரு நடிகை குறித்து இந்த மாதிரி கேவலமான எண்ணம் உங்களுக்குள் இருக்கிறது என்பதை வெள்ப்படுத்தும் பேச்சுதான் அது. எனவே இதுபோன்ற பேச்சுக்கள் எந்தக் காலத்திலும் யாரும் பேசக்கூடாது" என்று கூறியுள்ளார்.