செருப்பால் அடிப்பேன் உன்னை - ரஜினியை நேருக்கு நேராக திட்டிய பிரபல இயக்குநர்..!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை பிரபல இயக்குநர் ஒருவர் திட்டடியதாக தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மனதில் நீங்காத நடிகர்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். 1980 களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் ரஜினிகாந்த்.
இவர் நடித்த பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது அசாத்திய நடிப்பால் மக்கள் மனதை வென்றார். 70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதையும் மாற்றாமல் இன்னும் அதே போல் இருந்து வருகிறார்.
எத்தனை பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ள இவரை செருப்பால் அடிப்பேன் என இயக்குநர் ஒருவர் கூறியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடுமையாக திட்டிய இயக்குநர்
தற்போது நடிகர் ரஜினி ஜெயிலர் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். ரஜினி பிரபல இயக்குநர் ஒருவரிடம் திட்டு வாங்கியதாக தகவல் ஒன்று வெளியாகி பேசப்பட்டு வருகிறது.
1970 களில் பாலசந்தர் இயக்கத்தில் நடித்து வந்த ரஜினி தன் படப்பிடிப்பை முடித்துவிடடு வீடு திரும்பி உள்ளார். வீட்டில் நடிகர் ரஜினி மது அருந்திவிட்டு ஓய்வெடுத்து வந்த அவரை படப்பிடிப்பிற்காக மீண்டும் அழைத்துள்ளார் பாலசந்தர்.
அப்போது செய்வதறியாது இருந்த ரஜினி, மது அருந்தியதை மறைக்க தன்னை தயாா்படுத்திக் கொண்டு படப்பிடிப்புக்கு சென்றாராம்.
அப்போது நடிகர் ரஜினி மது அருந்தியதை கண்டு பிடித்துவிட்டாராம். அதன் பின் உனக்கு நாகேஷ் பற்றி தெரியுமா எனக் கேட்டாராம். நீ எல்லாம் அவர் நடிப்பிற்கு முன் ஒன்னுமே இல்ல.
அவர் மது பழக்கத்திற்கு ஆளாகி வீணாகியது போல, நீயும் ஆக போகிறாராயா? இனி நான் உன்னை இப்படி பார்த்தால் செருப்பால் அடிப்பேன் என கூறியுள்ளார்.
இதயடுத்து நடிகர் ரஜினி எந்த ஒரு படப்பிடிப்பு தளத்திற்கும் மது அருந்து விட்டு செல்லக்கூடாது என்ற முடிவு செய்தாராம் ரஜினி.