பிறந்தநாள் பார்ட்டி; போதை ஊசியால் பறிப்போன உயிர் - தொடரும் மரணங்கள்!
போதை ஊசி செலுத்திக் கொண்டதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
போதை ஊசி
சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் ராகுல்(19). இவர் செங்கல்ராயன் கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
தொடர்ந்து, அண்ணா சாலையில் இருக்கக்கூடிய விடுதி ஒன்றில் தங்கி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், காலையில் எழுந்த மாணவன் மயங்கி விழுந்துள்ளார்.
மாணவன் பலி
உடனே அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்துள்ளார். அதனையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது போதைப்பொருள் பவுடரை ஊசி மூலமாக செலுத்திக் கொண்டது தெரிய வந்தது.
அதிகப்படியான போதை ஊசி போட்டுக் கொண்டதால் வலிப்பும் ஏற்பட்டுள்ளது. தற்போது, போதைப்பொருள் பவுடர் எங்கிருந்து கிடைத்தது என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.