கோவையில் போதை ஊசி விற்பனை படு ஜோர்...வெளியான அதிர்ச்சி வீடியோ!
கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் இளைஞர் சிலர் போதை ஊசி செலுத்துவது தொடர்பான வீடீயோ சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டத்தில் புறநகர் மற்றும் மாநகர் பகுதிகளில் இளைஞர்கள் சிலர் போதை பொருட்களுக்கு அடிமையாகி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக தொடந்து புகார்கள் எழுந்த நிலையில் தற்போது கோவை உக்கடம் புல்லுகாடு பகுதியில் இளைஞர் சிலர் போதை பொருட்களைக் தண்ணீரில் கலந்து ஊசியில் ஏற்றி, போதை ஏற்றுவது தொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.இந்த வீடியோ தொடர்பாகவும் ,இந்த வீடீயோவில் உள்ள இளைஞர்கள் குறித்தும் கோவை மாநகர போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பாக இது போன்ற போதை ஊசி செலுத்தி கொண்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடதக்கது.மேலும் இது போன்று போதைக்கு அடிமையாகும்
இளைஞர்களால் குற்றம்சம்பவங்கள் நடக்கும் என்றும் இதைக் கண்கானித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.