குழந்தைப் பெற்றுக்கொண்டால் கூடுதலாக 42 ஆயிரம் - அரசு அதிரடி!
குழந்தைக்கு வழங்கப்படும் இன்ஷூரன்ஸ் தொகையை அதிகரிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
பிறப்பு விகிதம்
ஜப்பானில் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 8,11,604 பிறப்புகளும், 14,39,809 இறப்புகளும் பதிவாகி உள்ளன. இதன் விளைவாக மக்கள்தொகை எண்ணிக்கை 6,28,205 வரை குறைந்துள்ளது. இதனை அதிகரிக்கக் குழந்தை பிறக்கையில் வழங்கப்படும் இன்ஷூரன்ஸ் தொகையை அதிகரிக்க,

அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, `Childbirth and Childcare Lump-Sum Grant’ என்ற பெயரில், புதிதாகக் பிறக்கும் குழந்தைகளுக்கு அவ்வரசு 2,52,338 ரூபாய் பணத்தை இன்ஷூரன்ஸ் தொகையாக வழங்கி வருகிறது.
அரசு முடிவு
இந்நிலையில், இதனை 3,00,402 ஆக உயர்த்தியுள்ளது. இதன் அடிப்படையில், 48,000 ரூபாயை உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்ய உள்ளது. இதனால் மக்களிடையே குழந்தை பிறப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து சுகாதார மற்றும் நலத்துறை அமைச்சர் கட்சுனோபு காடோ, பிரதம மந்திரி ஃப்யூமியோ கிசிடாவிடம் பேசியுள்ளார். இதனால் ஊக்கத்தொகை அதிகரிப்புக்குப் அனுமதி கிடைத்துள்ளதாகவும், வரும் நிதியாண்டில் இது நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.