இவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இதற்கு பிறகு வழங்கப்படாது - திட்டவட்டம் அறிவித்த தமிழக அரசு!!
இவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பிறப்பு சான்றிதழ்
நாட்டில் ஒருவர் இந்த நேரத்தில், இடத்தில், இவருக்கு தான் பிறந்தார் என்பதை குறிப்பிட்டு சொல்வதே பிறப்பு சான்றிதழ். இது அத்தியாவசியமான ஒன்றாகும்.
பள்ளியில் சேருவதில் துவங்கி அனைத்து விதமான அரசு ஆதார அட்டைகளை அனைத்தயும் பெற முதல் ஆதாரம் இந்த பிறப்பு சான்றிதழ். அடிப்படை ஆதாரங்களான இதனை பெற இனியும் கால அவகாசம் நீடிக்கப்படாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
திட்டவட்டம்
ஒருவரின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறகு, பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளில் துவங்கி அடுத்த 12 மாதத்திற்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் உறுதிமொழியை பதிவாளரிடம் அளித்து கட்டணமுமின்றி பெயரை பதிவு செய்யலாம்.
அதே நேரத்தில் 12 மாதங்களை கடந்தாலும் அடுத்த 15 வருடங்களுக்குள் கால அவகாசத்தில் ரூ. 200 தாமத கட்டணமாக செலுத்தி பதிந்து கொள்ளலாம். பிறந்து 15 வருடங்கள் கடந்து விட்ட பின்னரும் பெயர் பதிவு செய்யாதவர்களுக்கு விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு வரும் 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
01.01.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், 01.01.2000 க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெறலாம் . இதற்கான கால அவகாசம் 31.12.2024 வரை மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் இந்த கால அவகாச நீட்டிப்பு வழங்கப்பட இயலாது என தமிழக அரசு தரப்பில் இருந்து திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.