தீவிரமெடுக்கும் புதிய வைரஸ்; உலக நாடுகள் அலெர்ட் - அறிகுறிகள் என்னென்ன?
H5N1 எனப்படும் புதிய பறவை காய்ச்சல் வைரஸ் பரவி வருகிறது.
H5N1 வைரஸ்
விலங்குகள் மற்றும் மனிதர்களைப் பாதிக்கும் புதிய வைரஸ் ஒன்று அமெரிக்காவில் அதிவேகமாக பரவி வருகிறது. பறவைகளை பாதிக்கும் இந்த வைரஸ், நேரடி தொடர்பு மூலம் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
இந்த வைரஸ் தொற்றால் 995 க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் மற்றும் 70 மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்மேலும் காட்டுப் பறவைகள், கொல்லைப்புற மந்தைகள் மற்றும் வேட்டையாடப்பட்ட புலம்பெயர்ந்த உயிரினங்களில் இந்த வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.
இது மனிதர்களுக்கும் வீட்டு விலங்குகளுக்கும் ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது. இதுவரை இந்த வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவவில்லை. இந்த வைரஸ் தாக்கும் மனிதர்களுக்கு வழக்கமான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் (காய்ச்சல், இருமல், தொண்டை வலி) முதல் நிமோனியா மற்றும் கடுமையான சுவாசக் கோளாறு நோய்க்குறி (ARDS) போன்ற கடுமையான சுவாச நோய்கள் வரை இருக்கும்.
அறிகுறிகள்
சில நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு, மூளைக்காய்ச்சல் மற்றும் பல உறுப்பு செயலிழப்பு ஆகியவையும் ஏற்பட்டுள்ளன. எனவே, H5N1 வைரஸ் அறிகுறி காணப்படுபவர்கள் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. தொற்று அபாயத்தைக் குறைக்க இந்த வைரசால் பாதிக்கப்பட்ட பறவைகள் மற்றும் பறவை சடலங்கள் அல்லது எச்சங்கள் போன்ற மாசுபட்ட பொருட்களுடன் தொடர்பைத் தவிர்க்க வேண்டும்.
இந்நிலையில், 40 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மனித மற்றும் விலங்கு வைராலஜிஸ்டுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான குளோபல் வைரஸ் நெட்வொர்க், உலக நாடுகள் H5N1 வைரசுக்கு எதிராக தயார் நிலையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.